தன் மகள்கள் இருவருக்கும் ரஜினி பார்த்த மாப்பிள்ளை யார் தெரியுமா? இந்த நடிகரின் மகன்களா?
ரஜினி:
இன்று ரஜினி தன்னுடைய 74 வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு திரையுலகில் இருந்தும் அரசியல் பிரபலங்களிடமிருந்தும் ஏகப்பட்ட வாழ்த்து மழைகள் குவிகின்றன. வழக்கம் போல அவருடைய ரசிகர்கள் அதிகாலையில் இருந்தே ரஜினியின் வீட்டு முன்பு குவிந்து அவருடைய தரிசனத்திற்காக காத்துக் கொண்டிருக்கின்றனர். தனது ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் ரஜினி அவருடைய வீட்டின் வாசலில் இருந்து ரசிகர்களை பார்த்து கையசைப்பது வழக்கம் .
அந்த ஒரு நிகழ்வுக்காக அவருடைய வீட்டின் முன்பு ரசிகர்கள் திரண்டு கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் ரஜினியை பற்றிய ஒரு சுவாரசிய தகவலை வலைப்பேச்சு அந்தணன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ரஜினியின் நெருங்கிய நண்பரும் நடிகருமான மோகன்பாபு. அவரைப் பற்றி ஒரு செய்தி சோசியல் மீடியாக்களில் வைரலானது. பத்திரிக்கையாளர்களை எட்டி உதைக்கும் காட்சி வைரலாகி மோகன் பாபு ஏன் இப்படி செய்தார் என அனைவருக்கும் ஒரு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
சொத்து தகராறு:
ஆனால் அதற்கு காரணம் அவருடைய குடும்ப நிகழ்வுகளில் பத்திரிகையாளர்கள் அத்துமீறி நுழைந்ததற்காகத்தான் மோகன் பாபு அந்த மாதிரி நடந்து கொண்டார் என தெரிய வந்திருக்கிறது. ஆனால் பத்திரிக்கையாளர்களை உள்ளே அனுமதித்ததற்கு மோகன் பாபுவின் மகன் மனோஜ் மஞ்சு என்பவர்தான் காரணமாம். மனோஜ் மஞ்சு மோகன் பாபுவின் இரண்டாவது மனைவியின் மகன் .
மூத்த மனைவிக்கு இரண்டு மகன்கள். மொத்தம் மோகன் பாபுவுக்கு மூன்று மகன்கள் இருக்கின்றனர். அதில் இரண்டாவது மனைவியின் மகனான மனோஜ் மஞ்சுவுக்கும் மோகன் பாபுவுக்கு இடையே சொத்து தகராறு சில காலமாக நடந்து வருகிறது. அதனால் தன் தந்தையிடம் பேச்சுவார்த்தை நடத்தவே அன்று வந்ததாகவும் வெளியில் பத்திரிகையாளர்கள் காத்துக் கொண்டிருக்க அவர்களை உள்ளே போகச் சொன்னது மனோஜ் மஞ்சு தான் என்றும் தெரியவந்திருக்கிறது.
திருமணம் ஒப்பந்தம்:
அதனால் இவர்களை யார் உள்ளே அனுப்பியது என தெரியாமல் மிகுந்த கோபத்துடன் பத்திரிக்கையாளர்களை விரட்டி அடித்தார் மோகன் பாபு. இது தெரிந்து அங்குள்ள ரசிகர்கள் மோகன் பாபுவுக்கு ஆதரவாக பேசி வருகின்றனர். இதற்கிடையில் மோகன் பாபுவும் ரஜினியும் நீண்ட கால நண்பர்கள் என அனைவருக்கும் தெரியும் அப்படி இருக்கும் பொழுது ரஜினிக்கு இரு பெண் குழந்தைகள்.
மோகன்பாபுவுக்கு இரு ஆண் குழந்தைகள் என இருக்க தங்களுடைய பிள்ளைகள் சிறுவயதாக இருக்கும் போதே மோகன் பாபு ரஜினியிடம் நம் பிள்ளைகளை மற்றவர்களுக்கு கட்டி கொடுத்து நம்முடைய சொத்துக்கள் அடுத்தவர்களுக்கு போக வேண்டாம். அதனால் என் மகன்களுக்கு உன்னுடைய மகள்களை திருமணம் செய்து கொடுத்துவிடு. நாம் இருவரும் சம்பந்தியாகவே இருக்கலாம் என கூறியிருந்தாராம்.
இதற்கு ரஜினியும் உடன்பட அன்றிலிருந்து இன்று வரை மோகன் பாபுவை பார்த்தால் ரஜினி சம்பந்தி என்றுதான் அழைப்பாராம். ஒரு கட்டத்தில் மோகன்பாபுவின் மகன்களின் நடவடிக்கை மோசமாக போனதால் இந்த திருமண ஒப்பந்தம் சரிவராது என ரஜினி நினைத்திருக்கிறார். மோகன் பாபுவும் தன் மகன்களுடைய யோக்கியத்தை அறிந்து நேரடியாக ரஜினியிடமே உன் மகள்களை வேறு யாருக்காவது திருமணம் செய்து கொடுத்து விடு என கூறினாராம் .ஆனால் இன்றுவரை மோகன் பாபுவை சம்பந்தி என்று தான் ரஜினி அழைத்து கொண்டு இருக்கிறாராம்.