Categories: Cinema News latest news

விஜய்க்கு தகுதியான இயக்குனர் இவர் தான்!.. லோகேஷ் இல்லங்க.. சொல்கிறார் பிரபல தயாரிப்பாளர்..

தமிழ் சினிமாவில் ஒரு வசூல் சக்கரவர்த்தியாக தற்போது உருவெடுத்திருப்பவர் நடிகர் விஜய். அவருடைய கால்ஷீட்டிற்காக காத்திருக்கும் தயாரிப்பாளர்கள் ஏராளம். ஆரம்பகாலங்களில் விஜயை புறம் பேசுனவர்கள் எல்லாம் இப்போது அவரின் வருகைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.

vijay lokesh

அந்த அளவுக்கு ஒரு எட்டாத வளர்ச்சியினை அடைந்து இருக்கிறார். இப்படி ஒரு மாபெரும் வளர்ச்சியை நினைக்கவில்லை என ஆரம்பகாலங்களில் விஜயுடன் நடித்த ஹீரோயின்கள் பல பேர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். அவருக்கென்று தனியான பாணி, ஸ்டைல் என மக்களை உற்சாகப்படுத்தி வருகிறார்.

முதலில் குடும்ப பாங்கான கதைகளில் நடித்து மக்களை கவர்ந்த விஜய் இப்போது ஒரு முழு ஆக்‌ஷன் ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அதன் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளார். ஏகப்பட்ட ரசிகர்களை கொண்டு ஒரு மாஸ் ஹீரோவாக மாறியிருக்கிறார் விஜய்.

vijay2

இந்த நிலையில் சித்ரா லட்சுமணனிடம் ரசிகர் ஒருவர் ‘உங்களுக்கு விஜயின் கால்ஷீட் கிடைத்தால் எந்த இயக்குனரை வைத்து படத்தை இயக்கச் சொல்வீர்கள்?’ என கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த சித்ரா லட்சுமணன் ‘எனக்கு விஜயின் கால்ஷீட் கிடைத்தால் கண்டிப்பாக வெங்கட் பிரபுவை தான் இயக்கச் சொல்வேன்’ என்று கூறியிருக்கிறார்.

ஏனெனில் இப்ப உள்ள இயக்குனர்களில் வெங்கட் பிரபுவும் ஒரு ஆக்‌ஷன் கதைகளை திறம்பட் இயக்குவதில் வல்லவராக இருக்கிறார். மேலும் அவரிடம் நகைச்சுவைக்கும் பஞ்சமிருக்காது. இயல்பாகவே வெங்கட் பிரபு ஒரு ஹூமர் சென்ஸ் உள்ள இயக்குனர். அதுவும் போக விஜய்க்கும் நன்றாகவே நகைச்சுவை காட்சிகளில் நடிப்பது என்பது எளிதான விஷயம்,

vijay venkat prabu

அதனாலேயே வெங்கட் பிரபுவை தான் விஜயின் படத்தை இயக்கச் சொல்வேன் என்று பதில் கூறியிருந்தார். சித்ரா லட்சுமணன் கூறிய போது சீக்கிரமே அந்த சம்பவமும் நடக்க வாய்ப்பிருக்கிறது. ஏனெனில் வெங்கட் பிரபு ஏற்கெனவே விஜய் அஜித் ஆகியோரை வைத்து படம் பண்ண வேண்டும் என்ற ஆசையில் இருக்கிறார். அதனால் விஜய் தனியாக கால்ஷீட் கொடுத்தாலும் பண்றதுக்கு ரெடியாகத் தான் இருப்பார் வெங்கட் பிரபு.

இதையும் படிங்க : ராரா.. சரசக்கு ராரா.. ராவில் தொடங்கும் புகழ்பெற்ற தமிழ்ப்பட நடிகைகள் – ஒரு பார்வை

Published by
Rohini