×

நாசர் நடித்த முத்தான படங்கள் 

 
nnnh

நாசர் நடிகர், இயக்குனர், திரைக்கதை, வசனம், பாடலாசிரியர் மற்றும் பாடகராகவும் பணிபுரிந்த பன்முகக்கலைஞர். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக உள்ளார். 

நடிகர் நாசர் நடிப்பை மிகவும் நேசிப்பவர். அவர் தனக்கான கதாபாத்திரத்தை ;உணர்ந்து ரசித்து நடிப்பார். அவர் நடிப்பில் பல படங்கள் ரசிக்க வைப்பவை. நாயகன், தேவர் மகன், குருதிப்புனல், அவதாரம், தேவதை, மகளிர் மட்டும், பம்பாய், சந்திரமுகி, அந்நியன், பாகுபலி படங்கள் குறிப்பிடத்தக்கவை. இவர் பாப்கார்ன், மாயன், தேவதை, அவதாரம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். 

இவர் தெலுங்கில் நடித்த சண்டி திரைப்படத்திற்காக சிறந்த நடிப்பிற்கான நந்தி வருதைப் பெற்றார். தமிழக அரசின் விருதுகளாக கலைமாமணி விருதையும், ஆவாரம்பூ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருதையும், தமிழ் படத்திற்காக சிறந்த எதிர்மறை நடிகருக்கான விருதையும், எம்.மகன் படத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான விருதையும் பெற்றார். ஆந்திர அரசில் சிறந்த எதிர்மறை நடிகருக்கான விருதை சண்டி படத்திற்காகப் பெற்றார். 

தென்னிந்திய நடிகர் சங்கம் இவருக்கு கலைச்செல்வன் என்ற பட்டத்தைத் தந்துள்ளது.

கமலும் நாசரும் நெருக்கமான நண்பர்கள். ஆதலால் அவரது பல படங்களில் நாசர் தவறாமல் இடம்பெற்றிருப்பார். அதனால் தான் கமல் தன் மக்கள் நீதி மய்யம் கட்சியிலும் நாசரின் மனைவி கமீலா நாசர் இடம்பெற்றுள்ளார். கமலுடன் இவர் இணைந்து நாயகன், தேவர்மகன், மகளிர் மட்டும், அவ்வை சண்முகி, மைக்கேல் மதன காமராஜன், குருதிப்புனல், அன்பே சிவம், ஹேராம், மும்பை எக்ஸ்பிரஸ் உள்பட பல படங்களில் இணைந்து நடித்து தன் அசாத்திய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். 

தேவர் மகன் 

தேவர்மகனில் நாசர் மாயாண்டித்தேவராக வந்து மிரட்டியிருப்பார். இப்படம் 1992ல் வெளியானது. கமலின் சொந்தப்படம் இது. படத்தில் கமலுக்கு இணையாக நடித்து அனைவராலும் பாராட்டப்பெற்றார். அவர் பேசும் வசனங்கள் மிகக் கூர்மையானவை. படத்திற்கான வசனத்தை கமல்ஹாசன் எழுதினார். 

மகளிர் மட்டும் 

கமலின் சொந்தப்படமான மகளிர் மட்டும் படத்தில் நாசர் தான் கதாநாயகன். படத்தில் சபலபுத்தி கொண்ட கேரக்டராக நடித்து அசத்தியிருப்பார். அவரை வேலைக்குச் செல்லும் 4 பெண்கள் அடக்குவர். அதுதான் கதை. படத்தில் நாசர் தன் அசாத்திய நடிப்பை வெளிக்காட்டி ரசிகர்களை விழுந்து விழுந்த சிரிக்க வைப்பார். இப்படத்தில் கமல் கௌரவ வேடத்தில் நடித்திருப்பார். நாசர், ஊர்வசி, ரோகினி, ரேவதி ஆகியோர் நடித்த இப்படம் வெள்ளி விழா கண்டது. 

குருதிப்புனல்

குருதிப்புனலில் கமலுக்கு எதிராக தீவிரவாதியாக நடித்துள்ள நாசர் நடிப்பால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துவார். அவ்வை சண்முகியில் மாமி கமலை சுற்றிச் சுற்றி வட்டம்போடுவார். கமலும் தவறாமல் நாசரை மறக்காமல் தான் இயக்கும் அனைத்துப் படங்களிலும் நடிக்க வைத்துவிடுவார். 

அவதாரம் 

1995ல் இவர் கதாநாயகனாக நடித்து இயக்கிய படம் அவதாரம். இவரது அபார நடிப்புத்திறனை வெளிக்கொணர்ந்தது. இசைஞானி இளையராஜாவின் 6 பாடல்களும் படத்தில் தேனாறாக பாய்ந்தது. அதிலும், அரிதாரம் பூசிக்கொள்ள ஆசை, தென்றல் வந்து தீண்டும்போது என்ன வண்ணம்மோ....பாடல் மனதுக்கு இதமானவை. இப்படத்தில் நாசருக்கு ஜோடியாக ரேவதி நடித்திருப்பார். 

முகம் 

நாசரின் திரையுலக வரலாற்றில் மற்றொரு மணிமகுடத்தைப் பதித்த படம் முகம். இது 1999ல் வெளியானது. நாசர் நடிப்பின் எல்லையைத் தொட்டிருப்பார். முகம் தான் சமுதாயத்தில் வெற்றி பெற தேவை என கருதும் அசிங்கமான முகம் கொண்ட ரங்கனாக நாசர் தாழ்வு மனப்பான்மையுடன் நடித்திருப்பார். பின்னர் அவரே அந்த அழகான முகத்தைப் பெற வேண்டும் என முகமூடி அணிந்து வாழந்து பார்ப்பார். அந்த அழகு அவருக்கு மரியாதை, புகழை கொண்டு சேர்க்கிறது. அவரது மனைவியாக வரும் ரோஜாவே அவரது அழகான முகத்திற்காகத் தான் திருமணம் செய்து கொள்கிறார். நாசருக்கு ஒரு கட்டத்தில் ஆசை வருகிறது. தன் உண்மையான முகத்தை மக்கள் மதிக்கிறார்களா என பார்க்க வேண்டும் என நினைத்து முகமூடியை கழற்றுகிறார். அவரது மனைவியை ஒரு கொள்ளைக்காரன் என நினைத்து அவரைத் துரத்துகிறார். அவர் பக்கம் யாரும் நெருங்கவில்லை. அழகு மட்டுமே மரியாதை என உணர்ந்த நாசர் மீண்டும் முகமூடி வாழ்க்கை நடத்துகிறார். வணிகரீதியாக தோல்வி பெற்ற படம் என்றாலும் நாசர் உள்பட அனைத்து நடிகர்களும் திறம்பட நடித்த படம். இயக்கியவர் ஞானராஜசேகரன். இசை யாரு....நம்ம... இளையராஜாவே தான். இவர் நடித்த முகம் படம் அவரது நடிப்பில் ஒரு மைல் கல். 

இவர் நடிப்பில் விஜயுடன் போக்கிரி, தமிழன் படங்களும், ரஜினிகாந்துடன் வேலைக்காரன், படையப்பா, சந்திரமுகி ஆகிய படங்களும் பட்டையைக் கௌப்பின. மணிரத்னம் இயக்கத்தில் இவர் நடித்த இருவர் படம் அவரது அப்போதைய மார்க்கெட்டை மேலும் உயர்த்தியது.

From around the web

Trending Videos

Tamilnadu News