Categories: Cinema News latest news throwback stories

கங்கை அமரன் மறுத்ததால் பாக்கியராஜிக்கு கிடைத்த சான்ஸ்… இளையராஜாவின் பாடலில் இப்படி ஒரு கூத்தா?

வாழ்வியல் களத்தை மக்களோட இசையோட கூறுகளோடு ஒரு சினிமா பாடலில் உருவாக்க முடியுமா? அந்த வாழ்க்கையில இருந்தவங்க, அனுபவிச்சவங்க, கேட்டவங்க, பார்த்தவங்களால தான் உருவாக்க முடியும். அப்படி ஒரு இசையை இளையராஜா உருவாக்கியுள்ளார்.

அந்தப் பாடல் இடம்பெற்ற படம் புதிய வார்ப்புகள். 1979ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியானது. இந்தப் படத்தில் ஹீரோவா நடிக்க வேண்டியது கங்கை அமரன். அவர் நடிக்காததால பாக்கியராஜ் ஹீரோவாக நடித்தார். பெரிய கண்ணாடி போட்டு வித்தியாசமாக நடித்தது ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது.

இதையும் படிங்க… சோலோவா பின்னி பிடலெடுக்கும் தல! வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தின் அப்டேட் இதோ

இது ஒரு வித்தியாசமான புரட்சிகரமான படம். அதிலும் பாரதிராஜா படம்னா ரொம்ப வித்தியாசமா இருக்கும். இளையராஜாவும் சேர்ந்து விட்டால் கேட்கவே வேண்டாம். படம் படுசூப்பரா இருக்கும்.

ஒரு ஊரில நாயனக்காரரின் மகளாக இருக்கிறாள் ரதி. அந்த ஊருக்கு ஆசிரியராக வருகிறார் பாக்கியராஜ். இருவருக்கும் காதல். ரதியை எப்படியாவது அடையணும்னு நினைக்கிறார் நாட்டாமைக்காரர். அதனால அவருடைய கையாள் கவுண்டமணிக்கு ரதியைக் கல்யாணம் பண்ணி வைக்கிறார்.

இதைப் புரிஞ்சிக்கிட்ட கவுண்டமணி தான் கட்டிய தாலியைத் தானே கையால கழட்டி விடுகிறார். பின்னர் பாக்கியராஜிக்கு ரதியை மணமுடித்து வைக்கிறார்.

இந்தப் படத்தில் ஒரு கூத்துப்பாட்டு வருகிறது. இதை யாரும் பண்ணலையான்னு கேட்கலாம். கங்கை அமரனே பண்ணியிருக்கார். இளையராஜாவின் குருநாதர் ஜி.கே.வெங்கடேஷ் பண்ணியிருக்கிறார்.

வித்யாசாகர், யுவன் சங்கர் ராஜா என அனைவருமே கூத்துப்பாட்டு பண்ணியிருக்காங்க. இந்தப் பாட்டுக்கு கங்கை அமரன் குரல் கொடுக்க, இளையராஜா இசையுடன் குரலும் கொடுத்துள்ளார். பாரதிராஜா பாடலுக்கு காட்சியை படம்பிடித்து உயிர் கொடுத்துள்ளார். இப்படி 3 பேரும் சேர்ந்து பாடலை உருவாக்கி இருப்பாங்க.

பாட்டை எழுதுனவர் கங்கை அமரன். பாடலுக்கு தவில், நாதஸ்வரம் கருவிகளால் நய்யாண்டி இசை அமைத்து இருப்பார். உண்மையிலேயே கோவில் திருவிழாவில் நடப்பது போன்ற ஒரு கூத்து, இசை நிகழ்ச்சியைப் பாடலில் கொண்டு வந்து இருப்பார். வாயில வந்தபடி வகையுடனே படிச்சிடுவோம் என்பது தான் இந்தப் பாடலின் முதல் வரி.

கிண்டல், கேலி கலந்த தெம்மாங்கு கூத்து வடிவத்தை அச்சுஅசலாக அப்படியே படம் பிடித்து இருப்பார்கள். மேற்கண்ட தகவலை பிரபல திரை ஆய்வாளர் ஆலங்குடி வெள்ளைச்சாமி தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க… கமலுக்கு டாட்டா சொன்ன சிம்பு!. எஸ்.டி.ஆர் 48க்கு மாறும் இயக்குனர்!.. அட தயாரிப்பாளர் அவரா?!…

பாக்கியராஜ் ஹீரோவாக நடித்த முதல் படம் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் பாக்கியராஜிக்கு இது முதல் படம் என்றே சொல்ல முடியாது. அந்தளவு அருமையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார்.அதுவரை பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகவே இருந்தார். இந்தப் படத்திற்கு வசனம் எழுதியவரும் அவர் தான்.

sankaran v
பி.ஏ பட்டதாரியான இவர் ஊடகத் துறையில் 13 ஆண்டுகளாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, ஆன்மிகம்,லைப் ஸ்டைல் கட்டுரைகளை வழங்கி வந்தார். கடந்த 4 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் உதவி ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
Published by
sankaran v