Connect with us
bhagyaraj

Cinema News

ரூம்ல கூட தங்குன ரெண்டு பேரை உயர்த்தி விட்ட பாக்கியராஜ்.. யார் யார் தெரியுமா?..

பாரதிராஜா, இளையராஜா போன்ற திரை பிரபலங்கள் தமிழ் சினிமாவில் வாய்ப்புகளைத் தேடி போராடிக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில் தான் பலரும் தமிழ் சினிமாவில் நடிப்பதற்கும், இயக்குனர் ஆவதற்கும் வாய்ப்புகளை தேடி வந்தனர்.

சொல்லப்போனால் பாரதிராஜா காலகட்டம் என்பது புதிய முகங்கள் தமிழ் சினிமாவில் அதிகமாக அறிமுகமான காலகட்டம் என கூறலாம். அந்த சமயத்தில்தான் இயக்குனர் பாக்யராஜும் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

bhagyaraj2

bhagyaraj2

மற்ற பிரபலங்களைப் போலவே பாக்கியராஜ் மிகவும் கஷ்டப்பட்டுதான் சினிமாவிற்கு வந்தார். சென்னைக்கு பாக்கியராஜ் வந்தபோது அவரால் தனியாக ஒரு வீடு எடுத்து தங்க முடியாத நிலையில் இருந்தார். ஏனெனில் தனியாக வீடு எடுத்து தங்கினால் அதற்கு அதிக செலவு ஆகும். எனவே ஏற்கனவே தங்கியிருக்கும் நபர்களுடன் சேர்ந்து கொள்ளலாம் என முடிவெடுத்தார்.

அந்த சமயத்தில் சென்னையில் நடிகர் கல்லாப்பெட்டி சிங்காரமும், கவுண்டமணியும் ஒரு ரூம் எடுத்து சேர்ந்து தங்கியிருந்தனர் அந்த அறையில் பாக்கியராஜிற்கு இடம் கிடைத்தது. மூன்று பேரும் சேர்ந்து வாடகை கொடுக்க வேண்டும் என்கிற ரீதியில் அவர்கள் மூவரும் சேர்ந்து அங்கு தங்கினார்.

பாக்கியராஜ் செய்த உதவி:

இந்த சமயத்தில் பாக்கியராஜ் படங்களுக்காக திரைக்கதைகள் எழுதும் பொழுது அதற்கு மிகுந்த உதவியாக இருந்தவர் கல்லாப்பெட்டி சிங்காரம்தான், கவுண்டமணி அந்த அளவிற்கு அவருக்கு உதவியாக இல்லை என்று கூறப்படுகிறது.

kallapetti singaram

kallapetti singaram

இதனால்தான் பாக்கியராஜ் பிறகு இயக்குனரான பிறகு அவரது திரைப்படங்களில் கல்லாப்பெட்டி சிங்காரத்திற்கு அதிகமான வாய்ப்புகளை பெற்றுக் கொடுத்தார். அதேபோல கவுண்டமணி சினிமாவிற்கு வருவதற்கும் பாக்கியராஜ்தான் உதவியுள்ளார், பாரதிராஜாவிடம் கவுண்டமணியை பற்றி கூறி அவருக்கு வாய்ப்புகளையும் பாக்கியராஜ் தான் வாங்கி கொடுத்தார்.

ஆனால் ஏனோ பாக்கியராஜ் அவர் இயக்கிய படங்களில் கவுண்டமணிக்கு பெரிதாக வாய்ப்புகள் கொடுக்கவில்லை இப்படி தன்னுடன் தங்கிய நடிகர்களை கூட தமிழ் சினிமாவில் உயர்த்தி விட்டுள்ளார் பாக்கியராஜ்.

இதையும் படிங்க: அம்மாக்களை மட்டுதான் கொண்டாடுவீர்களா? தந்தையின் பாசத்தில் கண்ணீரில் ஆழ்த்திய திரைப்படங்கள்

Continue Reading

More in Cinema News

To Top