கலைஞர் போட்ட சட்டத்தை ஸ்டாலினுக்கு ஞாபகப்படுத்திய பாக்யராஜ்! காதுல விழுமா?
சிறுவயதிலிருந்தே சினிமா மீது அதிக ஆர்வம் கொண்ட பாக்யராஜ் ஆரம்பத்தில் உதவி இயக்குனராக வேலை செய்தார். இயக்குனர் பாலச்சந்தர் மூலம் சினிமாவில் நுழைந்த பாக்யராஜ் தன்னுடைய எழுத்து திறமையால் படிப்படியாக வந்த வாய்ப்புகளை பயன்படுத்திக் கொண்டார். புதுமை பித்தன், அந்த மனைவி போன்ற படங்களில் நடிகராகவும் சிகப்பு ரோஜாக்கள் படத்தின் மூலம் இயக்குனராகவும் தன்னுடைய பயணத்தை தொடர்ந்தார்.
தர்மதுரை, சந்தேகம் போன்ற வெற்றிப்படங்களின் மூலம் சிறந்த கதாசிரியராக அறியப்பட்டார் பாக்யராஜ். அவருடைய திரைக்கதையில் நகைச்சுவை மற்றும் சமூக சிந்தனையை தூண்டும் விதமாகவும் இருக்கும். சினிமா மட்டுமில்லாமல் தொலைக்காட்சி தொடர், எழுத்து, அரசியல் என பல துறைகளில் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார் பாக்யராஜ்.
இன்று வரை புதிய தலைமுறைக்கான ஊக்கமாகவும் இருந்து வருகிறார் பாக்யராஜ். மேலும் ஒரு சில படங்களில் குணச்சித்திர கேரக்டர்களிலும் நடித்து வருகிறார். இந்தியாவின் தலைசிறந்த திரைக்கதை எழுத்தாளர் என்ற பெயருக்கும் சொந்தக்காரராக அறியப்படுகிறார் பாக்யராஜ். இந்த நிலையில் பாக்யராஜ் தற்போது வெள்ளக்குதிர படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு பேசிய பாக்யராஜ் சில விஷயங்களை பகிர்ந்தார்.
அதாவது பெரிய படங்கள் ரிலீஸாகும் போது சின்ன படங்கள் சந்திக்கும் சவால்கள் அதிகம். பெரிய பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸாகிறது என்றால் சின்ன படங்களுக்கு தியேட்டர்களே கிடைப்பது இல்லை. எல்லா ஸ்கிரீன்களிலும் பெரிய படங்களையே ரிலீஸ் செய்கின்றனர். இதனால் இன்று ஏகப்பட்ட சின்னப் படங்கள் ரிலீஸ் செய்ய முடியாமல் அடுக்கடுக்காக கிடக்கின்றது.

ஆனால் அந்த காலத்தில் கலைஞர் சின்ன படங்களுக்கும் தியேட்டர்கள் கிடைக்கவேண்டும் என ஒரு சட்டம் இயற்றினார். அந்த சட்டம் இப்போது இல்லை. அதை இப்போதுள்ள முதல்வர் கவனத்திற்கு கொண்டு செல்கிறேன். தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால் இதை கண்டிப்பாக செய்வார்கள் என பாக்யராஜ் கூறினார்.
