கே.பாக்யராஜின் மகன் சாந்தனுவுடன் கூட்டணி அமைக்கும் கார்த்தி பட இயக்குநர்!
Jul 13, 2026, 13:40 IST
மறைந்த நடிகரும், இயக்குநருமான கே.பாக்யராஜின் மகன் தான் நடிகர் சாந்தனு. இவர் 'சக்கரகட்டி, கோடிட்ட இடங்களை நிரப்புக, கசட தபற, இராவண கோட்டம், ப்ளூ ஸ்டார்' போன்ற பல படங்களில் நடித்திருக்கிறார்.
தற்போது, சாந்தனு ஹீரோவாக நடிக்க ஒரு புது படத்தில் ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த படத்தை 'வெண்ணிலா கபடிகுழு, நான் மகான் அல்ல' புகழ் இயக்குநர் சுசீந்திரன் இயக்கவிருக்கிறார்.
இவர்கள் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுதானாம். சுசீந்திரன் இயக்கிய 'பாண்டிய நாடு, நெஞ்சில் துணிவிருந்தால்' ஆகிய படங்களில் நடித்த விக்ராந்தும் இதில் சாந்தனுவுடன் இணைந்து நடிக்கவுள்ளாராம்.

விரைவில் இப்படத்தில் நடிக்கவிருக்கும் மற்ற நடிகர்கள் மற்றும் பணியாற்றவிருக்கும் தொழில்நுட்ப கலைஞர்களின் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
