Categories: Cinema News latest news

பானுமதியை காத்திருக்க வைத்துவிட்டு ரொமான்ஸில் இறங்கிய ரோஜா… என்ன இருந்தாலும் இப்படியா பண்றது?

செம்பருத்தி

1992 ஆம் ஆண்டு பிரசாந்த், ரோஜா ஆகியோரின் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் “செம்பருத்தி”. இத்திரைப்படம் ரோஜா தமிழில் நடித்த முதல் திரைப்படமாகும். இத்திரைப்படத்தை ஆர்.கே.செல்வமணி இயக்கியிருந்தார். இதில் தமிழின் பழம்பெரும் நடிகையான பானுமதி முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார்.

Chembaruthi

இயக்குனர் ஆர்.கே.செல்வமணியும் ரோஜாவும் பின்னாளில் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ஆனால் இவர்களின் காதல், “செம்பருத்தி” திரைப்படத்தின்போதே மலர்ந்துவிட்டது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பிரபல நடன இயக்குனரான புலியூர் சரோஜா, “செம்பருத்தி” திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சம்பவத்தை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார்.

பானுமதியை காக்கவைத்த படக்குழு

“செம்பருத்தி” திரைப்படத்தில் “செம்பருத்தி பூவு” என்றொரு பாடலுக்கு நடன இயக்குனராக நடனத்தை அமைத்துக்கொடுத்தார் புலியூர் சரோஜா. ரோஜாவுக்கு சரியாக ஆட வராதாம். எனினும் அந்த பாடலுக்காக பல நாட்கள் பிரசாந்த்துக்கும் ரோஜாவுக்கும் பயிற்சி கொடுத்தாராம். மேலும் அந்த பாடலில் கிட்டத்தட்ட 100 பேர் குரூப் டான்சர்களாக ஆடுவது போல் இருந்ததாம். ஆதலால் அந்த குரூப் டான்சர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டிருக்கிறது.

Puliyur Saroja

படப்பிடிப்பில் சொதப்பிவிடக் கூடாது என்பதற்காக மிகத் தீவிரமாக பயிற்சி அளித்திருந்தாராம் புலியூர் சரோஜா. இதனை தொடர்ந்து அந்த பாடல் படமாக்கப்பட்டது. அந்த பாடலில் பானுமதி நடனமாடுபவர்களை பார்த்துக்கொண்டிருப்பது போன்ற பல காட்சிகள் இடம்பெறும்.

Bhanumathi

ஆதலால் பானுமதியும் அந்த படப்பிடிப்பிற்கு வந்திருந்தார். அப்போது ரோஜா பல நேரங்களில் நடனமாடிக்கொண்டிருக்கும்போதே நின்றுவிடுவாராம். இதனால் பல டேக்குகள் போயிருக்கிறது. மேலும் அப்போது ஆர்.கே.செல்வமணிக்கும் ரோஜாவுக்கும் இடையே காதல் மலர்ந்துவிட்டிருந்ததால் படப்பிடிப்பின் இடையே அடிக்கடி இருவரும் பேசிக்கொண்டிருந்தனராம். பழம்பெரும் நடிகையான பானுமதியையும் பல மணிநேரம் காக்க வைத்துவிட்டதால் புலியூர் சரோஜாவுக்கு கோபம் வந்துவிட்டதாம்.

RK Selvamani

கடுப்பான புலியூர் சரோஜா

ஒரு கட்டட்தில் “நான் பணியாற்றத் தயாராக இல்லை” என கூறிவிட்டாராம் புலியூர் சரோஜா. எனினும் அவரை சமாதானப்படுத்த இயக்குனர் முயற்சி செய்தபோது,”பானுமதி அம்மா ரொம்ப நேரமா காத்துக்கிட்டே இருக்காங்க. ஒரு மூத்த நடிகையை இப்படி காக்க வைக்கலாமா? உங்களது காதலை படப்பிடிப்பு முடிவடைந்த பிறகு வைத்துக்கொள்ளுங்கள். இப்போது வேலையை மட்டும் பாருங்கள்” என மிக கடுமையாக திட்டியிருக்கிறார். இதன் பிறகுதான் ரோஜா நன்றாக நடனமாடினாராம். அந்த நடன காட்சியும் படமாக்கப்பட்டதாம்.

இதையும் படிங்க: பிரபல டான்ஸ் மாஸ்டரின் மகனின் மீது ஆசைப்பட்ட சில்க் ஸ்மிதா… ஆனால் இதில் சோகம் என்னன்னா??

Arun Prasad
Published by
Arun Prasad