×

பாரதி பாஸ்கரின் உடல்நிலை குறித்து அதிகாரபூர்வ தகவல்... எப்படி இருக்காங்க மேடம்

 டாக்டர்கள் பாரதி பாஸ்கரின் உடலை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். 
 
2ff5fd18-1ce5-4641-818e-78ce2fcff125

பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பிரபல பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் தனது இயல்பான பேச்சுகளால் மக்களைக் கவர்ந்தவர். 

கெமிக்கல் இன்ஜினியரிங் மற்றும் எம்.பி.ஏ முடித்துள்ள இவர் வங்கியில் முக்கிய பொறுப்பில் இருந்தாலும், பேச்சின் மீதுள்ள ஆர்வத்தால் தொடர்ந்து பட்டிமன்ற மேடைகளில் பேசி வந்தார். குறிப்பாக பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் பட்டிமன்ற மேடைகளில் பாரதியை கட்டாயம் பார்க்க முடியும்.

அதிலும் பட்டிமன்ற ராஜாவுக்கும், பாரதிக்கும் தான் கடுமையான போட்டி நிலவும். பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா யார் பக்கம் தீர்ப்பளிப்பார் என ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருப்பார்கள். அந்தளவுக்கு பட்டிமன்ற பேச்சில் பிரபலமாக திகழ்ந்தவர் பாரதி பாஸ்கர்.

bharathi

இந்நிலையில் பாரதியின் மூளைக்கு செல்லும் ரத்த குழாயில் ஏற்பட்ட கசிவை, அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அந்த முயற்சி வெற்றிகரமாக கை கொடுத்ததைத் தொடர்ந்து, டாக்டர்கள் பாரதி பாஸ்கரின் உடலை தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். இதற்கிடையே அவர் விரைவில் குணமடைய வேண்டி, உலகம் முழுவதும் இருக்கும் பாரதியின் ரசிகர்கள் பிரார்த்தனை நடத்தினார்கள்.

இந்நிலையில் பாரதி பாஸ்கரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும், அடுத்தவாரம் அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் எனவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
 

From around the web

Trending Videos

Tamilnadu News