பாரதி கண்ணம்மா வினுஷா தேவியின் ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. இந்த சீரியல் முதல் சீசனில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி ஹரிப்ரியன் சீரியலை விட்டு விலகிய நிலையில் அவருக்கு பதிலாக நடிக்க தொடங்கினார் வினுஷா தேவி.
முதல் சீசன் முடிவுக்கு வந்து தற்போது இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. இதிலும் நாயகியாக நடித்து வருகிறார் வினுஷா தேவி. தற்போது இவர் தி நகரில் உஸ்மான் ரோட்டில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார்.
விதவிதமான ஆடைகள், ஆபரணங்கள் என அனைத்தையும் கண்டு அசந்து போய் உள்ளார். அதிலும் குறிப்பாக விலையைக் கேட்டு வியந்துள்ளார்.
காரணம் நான்கு புடவை ஆயிரம் ரூபாய், பட்டுப்புடவை போன்றே இருக்கும் புடவைகள் 600 ரூபாய் என நம்ப முடியாத ரேட்டில் தரமானதாக கிடைப்பதாக தெரிவித்துள்ளார். கம்மியான விலையில் தரமான டிரஸ் வாங்க ஒரே கடை இதுதான் என அவரது ஷாப்பிங் வீடியோவில் புகழ்ந்து பேசி உள்ளார்.
இவரது இந்த ஷாப்பிங் வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
Rashmika Mandana:…
Ajith Vijay:…
Seeman: இயக்குனர்…
வெற்றிமாறன் இயக்கத்தில்…
Vijay TVK:…