Sivaji Home: இந்த வீடு உங்கள விட்டு போகாது.. சிவாஜி இல்லம் ஜப்தி செய்யப்பட்டதும் குறி சொன்ன நடிகர்
தமிழ் சினிமாவில் ஒரு மிகப்பெரிய ராம்ராஜ்ஜியமாக வாழ்ந்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். தன்னுடைய நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்த சிவாஜி கணேசன் இன்று சினிமாவில் நடிக்க ஆசைப்படும் ஒவ்வொருவருக்கும் பாடமாக இருந்து வருகிறார். சினிமாவின் என்சைக்ளோபீடியா என்றே சிவாஜி கணேசனை குறிப்பிடலாம். எப்பேற்பட்ட சாதனை, எத்தனை படங்கள்!
அப்படி தன்னுடைய உழைப்பால் அன்னை இல்லம் என்ற பெயரில் ஒரு பெரிய அரண்மனையையே கட்டினார் சிவாஜி கணேசன். ஆனால் அந்த வீடு ஜப்தி செய்யப்படும் என்ற உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு அனைவருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அந்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. இது பிரபுவின் வீடு என்பதால் இந்த உத்தரவு செல்லாது என நீதிமன்றம் கூறியது.
சிவாஜி கணேசனின் பேரன் துஷ்யந்த் தயாரித்த ஜகஜால கில்லாடி திரைப்படத்திற்காக தனபாக்கியம் எண்டர்பிரைசஸ் நிறுவனத்திடம் 3 கோடியே 74 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். ஆனால் இந்த கடனை அவரால் திருப்பி செலுத்த முடியவில்லை. அதனால் கடன் கொடுத்த நிறுவனம் இது சம்பந்தமாக வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில் சிவாஜியின் அன்னை இல்லம் ஜப்தி செய்ய நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்தது.
ஆனால் இதில் ட்விஸ்ட் என்னவெனில் இந்த வீடு சிவாஜியின் மூத்தமகனான ராம்குமாரின் வீடு கிடையாது. பிரபுவின் வீடு என்பதால் இந்த உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது. அதன் பிறகு வில்லங்க பதிவில் நீதிமன்ற ஜப்தி உத்தரவை நீக்க பதிவுத்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அன்னை இல்லம் பிரபுவை விட்டு போகாது என பிரபல நடிகர் பிரபுவிடம் குறி சொல்லியிருக்கிறார்.

இதை அந்த நடிகரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அவர் வேறுயாருமில்லை. நடிகரும் இயக்குனருமான பாரதி கண்ணன் தான். பிரபுவை வைத்து திருநெல்வேலி படத்தை எடுத்தவர்தான் பாரதிகண்ணன். அன்னை இல்லம் ஜப்தி செய்யப்படும் என்ற உத்தரவை கேட்டதும் பாரதிகண்ணன் அவருடைய குல தெய்வக் கோயிலுக்கு சென்றிருக்கிறார். அங்கு குறி சொல்வார்களாம். அப்படி குறி கேட்கும் போது அன்னை இல்லம் பறி போகாது. பிரபுவிடம் தான் இருக்கும் என குறி சொல்லியிருக்கிறார்கள்.
இதை சென்னை வந்ததும் பிரபுவுக்கு போன் செய்து பாரதிகண்ணன் ‘அண்ணே இந்த வீடு உங்களை விட்டு போகாது. உங்களிடம் தான் இருக்கும். இது நான் குறி சொல்கிறேன் என்றே வைத்துக் கொள்ளுங்கள். ஆனால் அது உங்க வீடுதான்’ என பாரதிகண்ணன் கூறியுள்ளார்.
