×

உன் வலி உனக்கு மட்டும்தான் தெரியும்.. தலைவா ஐ லவ் யூ - பாரதிராஜா நெகிழ்ச்சி...

 

நடிகர் ரஜினி வருகிற 31ம் தேதி அரசியல் அறிவிப்பை அறிவிப்பதாக கூறியிருந்த நிலையில், தான் அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்துவிட்டார். இது அவரின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் கொடுத்துள்ளது. தனது உடல்நிலையை காரணம் காட்டி ரஜினி இந்த முடிவை எடுத்துள்ளார்.

இந்நிலையில், இயக்குனர் பாரதிராஜா தனது டிவிட்டர் பக்கத்தில் ரஜினியின் முடிவுக்கு வரவேற்பு தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், உன் வலியும், வேதனையும் உன் உடம்பிற்கும் மனதிற்கும் மட்டும் தான் தெரியும்; ஆன்மீகத்தின் உச்சத்தில் நீங்கள் வெற்றி பெற்று உள்ளீர்கள். நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள்.. தலைவா ஐ லவ் யூ’ என நெகிழ்ச்சியாக பேசியுள்ளார்.


 


 

From around the web

Trending Videos

Tamilnadu News