Categories: Cinema News latest news

மும்முரமாக நடந்துகொண்டிருந்த படப்பிடிப்பு… ஐட்டம் சாங்கிற்கு நடனமாடிய பாரதிராஜா… இவ்வளவு விளையாட்டுத்தனமாவா இருக்குறது??

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்த பாரதிராஜா, சமீப காலமாக பல திரைப்படங்களில் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் வெளிவந்த “திருச்சிற்றம்பலம்” திரைப்படத்தில் கூட தனுஷிற்கு தாத்தாவாக மிகவும் ஜாலியான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.

Bharathiraja

இந்த நிலையில் பாரதிராஜா தற்போது அருள்நிதி நடித்து வரும் புதிய திரைப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு நகைச்சுவையான சம்பவத்தை குறித்து வலைப்பேச்சு அந்தணன் தனது வீடியோ ஒன்றில் பகிர்ந்துள்ளார்.

Arulnithi

அதாவது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பில் அருள்நிதியை வைத்து ஒரு முக்கியமான காட்சியை படக்குழுவினர் படமாக்கிக்கொண்டிருந்தனராம். அப்போது மொத்த படக்குழுவும் அமைதியாக இருக்க “ஓ சொல்றியா ஓஓ சொல்றியா” என்ற பாடல் சற்று தூரத்தில் இருந்து ஒலித்துக்கொண்டிருந்ததாம்.

Oh Solriya

படப்பிடிப்பு மும்முரமாக நடந்துகொண்டிருக்கும்போது யார் இவ்வளவு சத்தமாக பாடல் கேட்டுக்கொண்டிருப்பது என்று கோபமானாராம் இயக்குனர். உடனே பாடல் வந்த திசையை நோக்கி வேகமாக நடந்து போனபோதுதான் இயக்குனர் அந்த காட்சியை கண்டிருக்கிறார்.

இதையும் படிங்க: விடுதலை படப்பிடிப்பில் நேர்ந்த விபத்திற்கு இந்த சம்பவம்தான் காரணம்?? பகீர் தகவலை பகிர்ந்த மூத்த பத்திரிக்கையாளர்…

Bharathiraja

அதாவது பாரதிராஜா “ஓ சொல்றியா” பாடலை ஒலிக்கவிட்டு நடனமாடிக்கொண்டிருந்தாராம். அப்போது அவர் அருகில் சென்ற இயக்குனர், “சார், ஷூட்டிங்க நடந்துட்டு இருக்கு” என கூறியுள்ளார். அதனை கேட்ட பாரதிராஜா பாடலை அணைத்துவிட்டு “ஷூட்டிங் நடந்துட்டு இருக்கா? நான் கூட நீங்க பிரேக் விட்டிருக்கீங்களோன்னுல நினைச்சேன்” என அசால்ட்டாக கூறினாராம். இதனை கேட்ட இயக்குனர் ஷாக் ஆனாராம். இதனை தொடர்ந்து மீண்டும் அந்த காட்சியை படமாக்கத் தொடங்கினார்களாம்.

Arun Prasad
Published by
Arun Prasad