Connect with us

Cinema News

முக்கால்வாசி படத்தோட கதை அவரோடது கிடையாது..- படம் இயக்குவதில் மாற்று வித்தையை கையாண்ட பாரதிராஜா!

இயக்குனர்களின் இமையம் என தமிழ் சினிமாவில் அழைக்கப்படுபவர் இயக்குனர் பாரதிராஜா. 1977 களில் துவங்கி 1990கள் வரையிலும் மிகவும் பிரபலமான ஒரு இயக்குனராக இருந்தவர். அவர் இயக்கிய திரைப்படங்களில் கிழக்கு சீமையிலே, முதல் மரியாதை, வேதம் புதிது, ஒரு கைதியின் டைரி என பல படங்கள் மிகவும் பிரபலமானவை.

முக்கியமாக கிராமத்து மக்களின் வாழ்க்கை முறையை மிகவும் இயல்பாக காட்டக்கூடியவர் பாரதிராஜா. இப்போது உள்ள இயக்குனர்கள் எல்லாம் படத்திற்கான கதையை அவர்களே எழுதி, அதற்கு திரைக்கதை, வசனம் அனைத்தும் எழுதி படமெடுக்கின்றனர். ஆனால் இதை அனைத்து இயக்குனர்களும் பின்பற்றுவது இல்லை.

கருப்பு வெள்ளை சினிமா காலக்கட்டத்தில் படத்தின் திரைக்கதைகளை எழுத்தாளர்களே எழுதி வந்தனர். இப்போது இருக்கும் இயக்குனர் ஷங்கர் கூட வெகுக்காலமாக எழுத்தாளர் சுஜாதாவுடன் சேர்ந்த திரைக்கதையை எழுதி வந்தார். ஆனால் இந்த விஷயத்தை தனது முக்கால்வாசி திரைப்படங்களில் வெளிப்படுத்தியுள்ளார் இயக்குனர் பாரதிராஜா.

பாரதி ராஜா இயக்கிய முக்கால்வாசி திரைப்படங்களுக்கு கதை, திரைக்கதை அவர் எழுதுவது கிடையாது. உதாரணமாக அலைகள் ஓய்வதில்லை திரைப்படத்தின் கதை மணிவண்ணனுடையது, அந்த படத்திற்கு திரைக்கதையும் மணிவண்ணனே எழுதினார். ஆனால் படத்தை இயக்கியது பாரதிராஜா.

ஒரு இயக்குனராக அவரது பங்கை மட்டும் எடுத்துக்கொண்டு சிறப்பாக செயல்ப்பட்டுள்ளார் பாரதிராஜா. ஒரு சிறப்பான கதையை எழுத முடிந்தால் அதை பாரதிராஜாவிடம் கொண்டு சென்று படமாக்க முடியும் என்கிற சூழலை தமிழ் சினிமாவில் உருவாக்கியிருந்தார் பாரதிராஜா.

Continue Reading

More in Cinema News

To Top