Connect with us
Ilaiyaraaja and Bharathiraja

Cinema News

இளையராஜாவுடன் சண்டையா?? தனது நட்பை புதுவிதமாக வெளிப்படுத்திய பாரதிராஜா… அடடா!!

தமிழ் சினிமாவின் ட்ரென்ட் செட்டர் இயக்குனராக திகழ்ந்த பாரதிராஜா, கிராமத்தை மையமாக வைத்து பல திரைப்படங்களை இயக்கியுள்ளார் என்பதை சினிமா ரசிகர்கள் பலரும் அறிவார்கள். இவர் இயக்கிய முதல் திரைப்படமான “16 வயதினிலே” திரைப்படம் மாபெறும் வெற்றித் திரைப்படமாக அமைந்தது.

Ilaiyaraaja and Bharathiraja

Ilaiyaraaja and Bharathiraja

“16 வயதினிலே” திரைப்படத்தை தொடர்ந்து “கிழக்கே போகும் ரயில்”, “சிகப்பு ரோஜாக்கள்”, “புதிய வார்ப்புகள்” போன்ற பல திரைப்படங்களை இயக்கினார் பாரதிராஜா. பாரதிராஜா தமிழில் இயக்கிய “16 வயதினிலே” திரைப்படத்தில் இருந்து தொடங்கி, 1986 ஆம் ஆண்டு வெளியான “கடலோர கவிதைகள்” திரைப்படம் வரை தொடர்ந்து அனைத்து திரைப்படங்களுக்கும் இசையமைத்தவர் இளையராஜாதான். இளையராஜாவும் பாரதிராஜாவும் மிகவும் நெருங்கிய நண்பர்களாக திகழ்ந்தனர்.

ஆனால் “கடலோர கவிதைகள்” திரைப்படத்தை தொடர்ந்து பாரதிராஜா தமிழில் இயக்கிய “வேதம் புதிது” திரைப்படத்திற்கு தேவேந்திரன் என்ற இசையமைப்பாளர் இசையமைத்தார். அதன் பின் ரஜினி நடிப்பில் பாரதிராஜா இயக்கிய “கொடி பறக்குது” என்ற திரைப்படத்திற்கு ஹம்சலேகா என்ற இசையமைப்பாளர் இசையமைத்தார். இந்த இரண்டு திரைப்படங்களிலும் இளையராஜா இசையமைக்கவில்லை.

Ilaiyaraaja

Ilaiyaraaja

பாரதிராஜா இயக்கிய பல திரைப்படங்களில் தொடர்ந்து இசையமைத்து வந்த இளையராஜா, “கடலோர கவிதைகள்” திரைப்படத்திற்கு பிறகு வந்த திரைப்படங்களுக்கு இசையமைக்கவில்லை என்பது இளையராஜாவின் சகோதரரான கங்கை அமரனுக்கு நெருடலை ஏற்படுத்தியதாம். ஆதலால் பாரதிராஜாவையும் இளையராஜாவையும் மீண்டும் சேர்த்துவைக்க வேண்டும் என கங்கை அமரன் விரும்பினாராம்.

இதையும் படிங்க: பிரபல இயக்குனரிடம் கைமாறும் ரெட் ஜெயன்ட் நிறுவனம்… இனி அரசியலில் மட்டும்தான் ஃபோகஸ்… உதயநிதி கறார்…

Gangai Amaran and Ilaiyaraaja

Gangai Amaran and Ilaiyaraaja

இதனை தொடர்ந்து பாரதிராஜாவையும் இளையராஜாவையும் நேரில் சந்திக்க வைத்தாராம் கங்கை அமரன். அதனை தொடர்ந்து பாரதிராஜா இயக்கத்தில் உருவான “என் உயிர் தோழன்” என்ற திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்தாராம். அந்த திரைப்படத்தின் போஸ்டரில் பாரதிராஜாவின் “என் உயிர் தோழன்” என்று அச்சிடப்பட்டிருக்குமாம். அந்த டைட்டிலின் கீழே இளையராஜாவின் பெயர் இடம்பெற்றிருக்குமாம்.

En Uyir Thozhan

En Uyir Thozhan

இதனை சேர்த்து படிக்கும்போது பாரதிராஜா, என் உயிர் தோழன் இளையராஜா என்பதாக பொருட்படும். இவ்வாறு இத்திரைப்படத்தின் போஸ்டரின் மூலம் பாரதிராஜாவின் உயிர் தோழனாக இளையராஜா திகழ்கிறார் என்பதை சொல்லாமல் சொல்லியிருப்பாராம்.

Bharathiraja and Ilaiyaraaja

Bharathiraja and Ilaiyaraaja

“என் உயிர் தோழன்” திரைப்படத்தை தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய “புது நெல்லு புது நாத்து”, “நாடோடித் தென்றல்” போன்ற திரைப்படங்களுக்கு இளையராஜா இசையமைத்தார். ஆனால் அதனை தொடர்ந்து பாரதிராஜா இயக்கிய எந்த திரைப்படத்திற்கும் இளையராஜா இசையமைக்கவில்லை.

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top