Connect with us
Bharathiraja

Cinema News

புதுமுக நடிகைக்கு பெயர் வைக்கச்சொல்லி அடம்பிடித்த இயக்குனர்… பாரதிராஜாவின் ராசியால் டாப் ஹீரோயின் ஆன சம்பவம்…

தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டராக திகழ்ந்த பாரதிராஜா, கிராமத்து கதைகளில் மிகவும் கைத்தேர்ந்தவராக இருந்தார். கிராமத்து கதைகள் மட்டுமல்லாது “சிகப்பு ரோஜாக்கள்”, “டிக் டிக் டிக்” போன்ற திரில்லர் வகையராக்களிலும் புகுந்து விளையாடினார் பாரதிராஜா.

பாரதிராஜாவிற்கு ஒரு சென்டிமென்ட் இருந்தது. அதாவது தான் அறிமுகப்படுத்தும் கதாநாயகிகளுக்கு “R” என்ற எழுத்தில் தொடங்குவது போன்ற பெயரையே வைப்பார். ராதா, ராதிகா, ரேவதி, ஆகிய நடிகைகளை பாரதிராஜாதான் அறிமுகப்படுத்தினார். இவர்களின் இயற்பெயர் வேறு ஒன்றாக இருந்தது. அந்த பெயர்களை எல்லாம் மாற்றி “R” என்று தொடங்குவது போன்ற பெயர்களை வைத்தார் பாரதிராஜா.

Bharathiraja

Bharathiraja

ஆனால் அவர் அறிமுகப்படுத்தாத ஒரு நடிகைக்கு “R”-ல் தொடங்குவது போன்ற ஒரு பெயரை வைத்திருக்கிறார் பாரதிராஜா. பின்னாளில் டாப் நடிகையாக வளர்ந்த அந்த நடிகை யார் என்பது குறித்து இப்போது பார்க்கலாம்.

1991 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளிவந்த திரைப்படம் “பிரேம தபசு”. இத்திரைப்படத்தை இயக்கியவர் டாக்டர் சிவபிரசாத். இவர் பாரதிராஜாவிற்கு மிகவும் நெருங்கிய நண்பராக திகழ்ந்தவர். இந்த நிலையில் “பிரேம தபசு” திரைப்படத்தில் ஸ்ரீலதா என்ற பெயர் கொண்ட ஒரு நடிகையை அறிமுகப்படுத்தினார் டாக்டர் சிவபிரசாத். எனினும் தனது நண்பரான பாரதிராஜாவை அழைத்து தான் அறிமுகப்படுத்தப்போகும் நடிகைக்கு ஒரு புதிய பெயரை வைக்க வேண்டும் என அடம்பிடித்திருக்கிறார்.

இதையும் படிங்க: முதல் சந்திப்பிலேயே பாரதிராஜாவை வாயை பிளக்க வைத்த கவிப்பேரரசு… அப்படி என்ன சொன்னார் தெரியுமா??

Roja

Roja

அப்போது பாரதிராஜா, அந்த நடிகைக்கு தனது “R” சென்டிமென்ட்படி ரோஜா என பெயர் வைத்தாராம். பின்னாளில் ரோஜா, தென்னிந்தியாவின் டாப் நடிகையாக வலம் வந்து, ஆந்திர அரசியலிலும் ஒரு கலக்கு கலக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
Arun Prasad
Continue Reading

More in Cinema News

To Top