என்னுடைய பயம் இது மட்டும்தான்!.. இறப்புக்கு முன் பாரதிராஜா கொடுத்த பேட்டி..
தமிழ் சினிமாவை புரட்டிப் போட்டவர் இயக்குனர் பாரதிராஜா. தமிழ் சினிமா ஸ்டுடியோவுக்குள் மட்டுமே எடுக்கப்பட்டு வந்த காலத்தில் வாய்க்கா,ல் வரப்புகளில் கேமராவை தூக்கிக்கொண்டு ஓடியவர் பாரதிராஜா. கிராமத்து வாழ்வியலை கிராமத்து மனிதர்களின் அன்பு, கோபம், வீரம், வன்மம், காதல் உள்ளிட்ட எல்லா உணர்வுகளையும் அப்படியே திரையில் பிரதிபலித்தவர் இவர்.
இவர் திரைப்படத்துறைக்கு வந்து வெற்றி பெற்று காட்டிய பிறகுதான் பலருக்கும் நாமும் இயக்குனராகலாம் என்கிற எண்ணம் வந்தது. அப்படி ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. எந்த பின்னணியும் இல்லாத எளியவர்கள் கூட சினிமா உலகில் சாதித்து காட்டமுடியும் என்கிற நம்பிக்கையை அவர்தான் கொடுத்தார்.
வயது மூப்பு மற்றும் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த பாரதிராஜா நேற்று அதிகாலை 2:00 மணியளவில் சென்னையில் உள்ள தனது வீட்டில் மரணமடைந்தார். இதையடுத்து அவருக்கு ரஜினி ,கமல் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். இன்று தேனியில் உள்ள பாரதிராஜாவின் பண்ணை வீட்டில் அவரது உடல் அடக்கம் செய்யப்படவிருக்கிறது. அதற்கான ஏற்பாடுகள் தற்போது செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில்தான் சில மாதங்களுக்கு முன் அவர் கொடுத்த பேட்டி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த உலகம் மிகவும் அழகானது.. பெண்கள் அழகானவர்கள்.. பூக்கள் அழகானவை.. மேகம் அழகு.. மலை அழகு.. நீர்வீழ்ச்சி அழகு.. அனைத்தும் அழகு.. இதையெல்லாம் விட்டுவிட்டு போய்விடுவோமோ என்று எனக்கு பயமாக இருக்கிறது.. இந்த அழகான உலகை நான் காதலிக்கிறேன்.. என்னை நான் காதலிக்கிறேன்.. இது போய் விடக்கூடாது என்று நினைக்கிறேன்’ என கூறியிருக்கிறார்.
