Categories: Cinema News latest news throwback stories

முதல் படத்திலேயே ஜெயலலிதாவை ஒப்பந்தம் செய்த பாரதிராஜா… ஆனால் நடந்த சம்பவமோ வேறு!!

தமிழின் முன்னணி இயக்குனராக திகழ்ந்து வந்த பாரதிராஜா, கிராமத்தை கதைக்களமாக கொண்டு பல வெற்றித் திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய “மண் வாசனை”, “வேதம் புதிது”, “முதல் மரியாதை”, “கிழக்குச் சீமையிலே”, “கருத்தம்மா” போன்ற திரைப்படங்கள் மிகவும் குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

கிராமத்து படங்கள் மட்டுமல்லாது “டிக் டிக் டிக்”, “சிகப்பு ரோஜாக்கள்” போன்ற பல த்ரில்லர் திரைப்படங்களையும் இயக்கியுள்ளார் பாரதிராஜா. தமிழ் சினிமாவின் டிரெண்ட் செட்டர்களில் ஒருவரான பாரதிராஜா இயக்கிய முதல் திரைப்படம் “16 வயதினிலே”.

Bharathiraja

ஆனால் பாரதிராஜா முதன் முதலாக இயக்க இருந்த திரைப்படம் “புதுமைப் பெண்”. ஆம்! அதாவது “புதுமைப் பெண்” திரைப்படத்தின் கதையில் ஜெயலலிதா நடிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டாராம் பாரதிராஜா.

ஆதலால் ஜெயலலிதாவிடம் அந்த கதையை கூறினாராம் பாரதிராஜா. ஜெயலலிதாவிற்கு அந்த கதை மிகவும் பிடித்துப்போனது. மேலும் இத்திரைப்படத்தில் முத்துராமன் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமானதாம். ஆனால் சில காரணங்களால் இத்திரைப்படத்தை உருவாக்க முடியவில்லை.

Jayalalithaa

அதன் பின்தான் பாரதிராஜா “16 வயதினிலே” திரைப்படத்தை உருவாக்கினாராம். இதனை தொடர்ந்து 1984 ஆம் ஆண்டு பாரதிராஜா அதே கதையை “புதுமைப் பெண்” என்ற பெயரில் இயக்கினார். இத்திரைப்படத்தில் ரேவதி, பாண்டியன் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது.

Jayalalithaa

இத்திரைப்படம் வெளிவந்த காலகட்டத்தில் ஜெயலலிதா, சினிமாக்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டாராம். ஆதலால் ஜெயலலிதாவை வைத்து இயக்கும் வாய்ப்பு பாரதிராஜாவுக்கு கிடைக்கவில்லை. எனினும் “புதுமைப் பெண்” என்ற டைட்டில் ஜெயலலிதாவிற்கு பொருத்தமான ஒன்றாகத்தானே இருந்துருக்கும்!!

Published by
Arun Prasad