வெற்றி மாறன் படத்திலிருந்து விலகிய பாரதிராஜா... இணைந்த முக்கிய நடிகர்!
இயக்குனர் வெற்றிமாறன் தற்போதும் தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே அசந்து பார்க்கும் மிக முக்கிய இயக்குனராகி விட்டார்.
Mon, 28 Dec 2020

இவரின் இயக்கத்தில் கடைசியாக வெளியான அசுரன் திரைப்படம் மாபெரும் வெற்றியடைந்தது, அதனை தொடர்ந்து பாவ கதைகள் படத்தில் இவர் இயக்கிய ஓர் இரவு பகுதி சிறந்த விமர்சங்களை பெற்றது.
இந்நிலையில் அடுத்ததாக இவர் நடிகர் சூரியை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கி வருகிறார், இப்படத்தில் இயக்குனர் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.
மேலும் தற்போது பாரதிராஜா சில காரணங்களால் இப்படத்தில் இருந்து வெளியாகியுள்ளார், அந்த கதாபாத்திரத்தில் தற்போது நடிகர் கிஷோர் நடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.