×

உயர்ந்த உள்ளம்.. உயர்ந்த கலைஞன்... அற்புத மனிதர்... ரஜினியை பாராட்டும் பாரதிராஜா...

சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி தனக்கு முதல்வர் ஆசையில்லை எனவும், தனக்கு நேரடி அரசியலில் ஆர்வம் இல்லை எனவும் பகீரங்கமாக தெரிவித்தார்.
 

மேலும், தான் வெற்றி பெற்றால் கட்சிக்கு மட்டுமே தலைவராக இருப்பேன் எனவும், தகுதியான ஒருவரை முதல்வர் பதவியில் அமர வைப்பேன் எனக்கூறி அவர் அரசியலுக்கு வருவார் என எதிர்பார்த்து காத்திருந்த அவரின் மாவட்ட செயலாளர்களும், ரசிகர்களும் அதிர்ச்சியை கொடுத்தார். ஆனாலும் அவரின் முடிவை பலரும் வரவேற்று வருகின்றனர்.

இந்நிலையில், ரஜினி முதல்வர் ஆவதை ஏற்க முடியாது. தமிழர் மட்டுமே தமிழ்நாட்டை ஆள வேண்டும் எனக் கூறிவந்த இயக்குனர் பாராதிராஜா ரஜினியின் இந்த முடிவை பெரிதும் வரவேற்றுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

எனது நாற்பது ஆண்டுகால நட்பில், இன்று இந்த சமூகம் உயர்ந்த உள்ளம், உயர்ந்த மனிதன், உயர்ந்த கலைஞன், சூப்பர் ஸ்டார் என கொண்டாடும் ‘ரஜினி’ என்ற மந்திரத்தை விட, ‘ரஜினி’ என்ற மனிதம் எப்படி வெளிப்படும் என்று நான் முன்பே அறிந்திருக்கிறேன். இன்று அந்த மனிதம்  வெளிப்படையாக,  மக்களுக்கு நன்மை  பயக்கும் புது கொள்கைகளை வரவேற்கிறது.

தமிழன் தான் ஆட்சிக்கு தலைசிறந்தவன் என்ற ரஜினியின் நாற்காலி கொள்கை, தமிழனின் வரலாறு, ஆகியவற்றின் மூலம் பேராசை என்ற சமூக விலங்கை உடைப்பதும் ரஜினி என்ற ஓர் உண்மைக்கே சாரும். ரஜினியின் அரசியல் கொள்கை, அரசியலாக அல்லாமல் தமிழுக்கும் தமிழ்மக்களுக்கும் நன்மை பயக்கும் விதமாக, சமயுக அரசியலில் யாரும் சிந்திக்காத ஒன்றாக, அன்று நான் அறிந்தவை, இன்று எம் தமிழக மக்களுக்கு ஓர் விதையாக கூட இருக்கலாம்.

ஆருயிர் நண்பன் என்பதை விட, சிறந்த  மனிதனாக, ரஜினியின் ‘நாணய அரசியலில்’ அதன் முதல் பக்கத்திலேயே ஓர் தமிழனை ‘அரசனாக’ ஆட்சி அதிகாரத்தில் அமர்த்துவேன் என்ற ஓர் மனிதத்தை, கொள்கைகளாக பார்க்காமல் அதை ரஜினியாக, ஓர் அற்புத மனிதனாகவே நான் பார்க்கிறேன்.

என அவர் குறிப்பிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News