×

தயாரிப்பாளர்களை நோஞ்சான் என சொல்லி சர்ச்சயைக் கிளப்பிய பாரதிராஜா!

பாரதிராஜா பழைய தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்களை நோஞ்சான் என சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

பாரதிராஜா பழைய தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்களை நோஞ்சான் என சொன்னது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாரதிராஜா தலைவராக பொறுப்பேற்றுள்ள நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கம் என்ற அமைபின் அலுவலகம் திறக்கும் விழா நேற்று நடந்தது. அப்போது பேசிய பாரதிராகா தயாரிப்பாளர் சங்கத்தில் உள்ளவர்களை நோஞ்சான் எனக் கூறியது சர்ச்சைகளைக் கிளப்பியது.

இந்நிலையில் தன் பேச்சுக்கு பதில் அளிக்கும் விதமாக தன் முகநூல் பதிவில் ‘வணக்கம், என் பாசத்துக்குரிய தயாரிப்பாளர்களே இன்றைய செய்தியாளர்கள் சந்திப்பில் "நோஞ்சான்"என்கின்ற வார்த்தை நம் சக தயாரிப்பாளர்களைக் காயப்படுத்தும் விதமாகப் பேசியிருப்பதாக ஊடகங்கள் வாயிலாக அறிந்தேன்.திரைத் துறையில் முதலாளித்துவமாக இருந்த தயாரிப்பாளர்கள், இன்று யார் யாருக்கோ அடிபணிந்து, ஒடுக்கப்பட்டு செயலற்ற நிலையில் திரியும் அவல நிலையைக் கண்டு கோபத்தில் வெளிவந்த வார்த்தைதான் தவிர வேறு எந்த உள்நோக்கத்துடன் நான் கூறவில்லை.மனதைக் காயப்படுத்தும் விதமாக பேசவேண்டும் என்கிற திட்டமிடுதல் இல்லை. இந்த வார்த்தை நம் தயாரிப்பாளர்களை உண்மையிலே காயப்படுத்திருந்தால், தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டது என்று அர்த்தம்" என வருத்தம் தெரிவித்துள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News