கழுத்தை பிடித்து வெளியே தள்ளிய ஏவிஎம் - சபதம் எடுத்து சாதித்த பாரதிராஜா!
தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரம் இயக்குனர் இமயம் என ரசிகர்களால் புகழ் பாராட்டப்பட்டவர் இயக்குனர் பாரதிராஜா. இவர் 84 வயதில் என்று உடல் நலக்குறைவு காரணமாக இன்று மரணம் அடைந்தார். அவருக்கு திரை துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து தங்களது அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் பாரதிராஜாவின் வாழ்க்கை குறித்தும் அவரது திரைப்படம் குறித்தும் பல சுவாரசியமான தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் பல வருடங்களுக்கு ஒரு முன்பு இயக்குனர் பாரதிராஜா பட்ட அவமானம் குறித்து சமூக வலைதளங்களில் ஒரு செய்தி வெளியாகியிருக்கிறது . அதாவது ஏவிஎம் நிறுவனத்தில் பாரதிராஜாவுக்கு மிக மோசமான ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
1964ஆம் ஆண்டு வெளிவந்த சர்வ சுந்தரம் திரைப்படத்தின் விநியோகஸ்தர்கள் அந்த படத்தின் காட்சியை பார்க்க ஏவிஎம் அலுவலகம் சென்று இருக்கிறார்கள். அப்போது பாரதிராஜா தன்னுடைய நண்பர் ஒருவருடன் சென்றிருக்கிறார். அங்கிருந்து அவர்கள் பாரதிராஜாவை யார் என்று கேட்டு வெளியே அனுப்பி இருக்கிறார்கள்.

அப்போது பாரதிராஜாவை அழைத்து சென்றவரே பயத்தில் அவர் யார் என்று எனக்கு தெரியாது என பொய் சொல்லிவிட்டாராம் அதன் பிறகு பாரதிராஜாவின் சட்டையை பிடித்து ஏவிஎம்வாசலில் இருந்து தள்ளிவிட்டு இருக்கிறார்கள்.
அந்த மோசமான சம்பவத்தை எண்ணி கலங்கிய கண்களோடு ஒருநாள் இந்த கம்பெனி என்னை கூப்பிடும் அளவிற்கு என்னுடைய ஆற்றலை நான் வளர்த்துக் கொண்டு வருவேன் என சபதம் ஏற்றி இருக்கிறார் பாரதிராஜா. அவர் சபதம் எடுத்தது படியே 1984 ஆம் ஆண்டு வெளிவந்த புதுமைப்பெண் படத்தை ஏவிஎம் நிறுவனம் தயாரித்திருந்தது குறிப்பிடத்தக்கது
