×

"என் மண்ணின் மைந்தன்" உன் அசுர நடிப்பை கண்டு...  தனுஷிற்கு பாரதிராஜா வாழ்த்து!

தமிழ் சினிமாவின் பிரபல நடிகர்களில் ஒருவரான தனுஷ் இன்று தந்து 37வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு ரசிகர்கள் , நண்பர்கள் , திரையுலகினர் என யாவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். இன்று தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு கர்ணன் படத்தின் பர்ஸ்ட் லுக் , மற்றும் ஜகமே தந்திரம் படத்தின் சிங்கிள் ட்ராக் உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது.

 

2002ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமான தனுஷிற்கு கேலி , கிண்டல்,  அவமானம் என அத்தனையும் அது ஒரு படத்தில் சந்தித்தார். ஆனாலும் துவண்டு போகாமல் தொடர்ந்து தனது வெற்றியை கொடுத்துக்கொண்டே இருந்தார்.

சுள்ளான் , புதுப்பேட்டை , காதல் கொண்டேன், பொல்லாதவன் போன்றவை அவரது திரை பயணத்தில் முக்கிய மைல் கல்லாக அமைந்தது. தற்ப்போது பாலிவுட் , ஹாலிவுட் படங்களிலும் நடித்து புகழ்பெற்ற நடிகராக சிறந்த விளங்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் பாரதி ராஜா தனுஷிற்கு ட்விட்டரில் வாழ்த்து கூறி. அந்த பதிவில்,

திரை மொழியை
மெளனமாய்
உடல் அசைவில்
உலகை அதிரவைத்த
ஒப்பற்ற நடிகன்.
தனுஷ்.

என் மண்ணின் மைந்தன்.
உன் அசுர நடிப்பை கண்டு இன்னும் வியக்கிறேன்.

வாழ்த்துக்கள்

அன்புடன்
பாரதிராஜா.

என பதிவிட்டுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News