×

பாவனா பெற்றோருக்குக் கொரோனா… ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேற்றம்

தொகுப்பாளினி மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் பாவனாவின் பெற்றோருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது.

 

தொகுப்பாளினி மற்றும் கிரிக்கெட் வர்ணனையாளர் பாவனாவின் பெற்றோருக்குக் கொரோனா உறுதியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக அறிமுகமானவர் பாவனா. சிவகார்த்திகேயனுடன் இணைந்து இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகள் வெகு பிரபலம். இதையடுத்து கடந்த சில ஆண்டுகளாக இவர் கிரிக்கெட் வரணனையும் செய்து வருகிறார்.தற்போது நடந்து வரும் ஐபிஎல் தொடருக்காக துபாய் சென்ற அவர் பயோ பபிளில் இருந்தார். இப்போது எதிர்பாராதவிதமாக அவரது பெற்றோருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்து அவர் ஐபிஎல் வர்ணனைக் குழுவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

இதுகுறித்து டிவிட்டரில் ‘கனத்த இதயத்துடன், ஐபில் தொடரிலிருந்து எனது தனிப்பட்ட காரணங்களுக்காக விலகுகிறேன். என்னுடைய தாய் தந்தை இருவருக்குமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களின் ஒரே மகளாக, நான் சென்னையில் இருக்க வேண்டிய அவசியமாகிறது. இந்த சீசன் முழுவதும் நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி. அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்யுங்கள்’ எனக் கூறியுள்ளார்.

From around the web

Trending Videos

Tamilnadu News