×

"பூமிகா" ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது பட டைட்டில் போஸ்டர் ரிலீஸ்!

மானாட மயிலாட மூலம் சினிமாவில் நுழைந்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ்,தொடர்ந்து சிறு படங்களில், நடித்து வந்த அவர் காக்கா முட்டை மூலம் அனைவருக்கும் தெரியவந்தார். அந்த படம்  ஹிட்டை அடுத்து முன்னணி நடிகைகள் லிஸ்டில் இடம் பிடித்தார்.

 

அதையடுத்து விஜய் சேதுபதியுடன் தர்மதுரை , தனுஷ் உடன் வட சென்னை,சிவகார்த்திகேயனுடன் உங்க வீட்டு பிள்ளை, செக்க சிவந்த வானம், வேர்ல்ட் பேமஸ் லவ்வர் என பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்துள்ளார். தற்போது விக்ரமுடன் துருவ நட்சத்திரம் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்ப்போது ஐஸ்வர்யா ராஜேஷின் 25-வது படத்தில் டைட்டில் லுக் போஸ்டர் படக்குழு வெளியிட்டுள்ளனர். " பூமிகா" என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை  ரதீந்திரன் ஆர்.பிரசாத் என்பவர் இயக்குகிறார். காடு, மலை , மரம் என இயற்கை சூழ்ந்து வித்யாசமாக உருவாகும் இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News