×

மன அழுத்தத்தால் பிக்பாஸ் நடிகை தற்கொலை முயற்சி - நொடிப்பொழுதில் காப்பாற்றிய நடிகர் சுதீப்

கன்னட பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஜெயஸ்ரீ ராமையா. இவர் கொரோனா ஊரடங்கினால் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார். ஒரு கட்டத்தில் சமாளிக்க முடியாமல் பேஸ்புக் லைவ் மூலம் ரசிகர்களுடன் கலந்துரையாடிக்கொண்டிருந்த போது இதனை தெரிவித்தார்.

 

அப்போது, தனக்கு தனிப்பட்ட பிரச்னைகள் நிறைய இருப்பதாக கூறிய அவர் மன அழுத்தத்தில் இருந்தால் தன்னால் மீண்டு வரமுடியவில்லை என வருத்தத்துடன் கூறினார். இதனால் இந்த உலகுக்கும் மன அழுத்தத்துக்கும் குட்பை சொல்லி விலகி செல்கிறேன் எனக்கூறி அந்த வீடியோவை முடித்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

பின்னர் சில நிமிடங்கள் கழித்து அந்த வீடியோவை நீக்கிவிட்டு ஒரு பதிவு போட்டார். அதில், மிக்க நன்றி சுதீப் சார். உங்களுக்கும் உங்கள் குழுவினருக்கும் என்னை காப்பாற்றியதற்காக நன்றி. உங்களை பீதிக்குள்ளாக்கியதற்கு வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன். என்று பதிவிட்டுள்ளார் தெரிவித்தார். இத மூலம் சுதீப் விரைந்து அவரை காப்பாற்றியிருப்பது தெரியவந்துள்ளது. தற்போது அவரது இந்த பதிவு வைரலாகி வருகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News