×

பிக்பாஸ் ஆரவ் தந்தை திடீர் மரணம் – ரசிகர்கள் இரங்கல்!
 

பிக்பாஸ் பிரபலம் ஆரவ் தந்தை மாரடைப்பால் திடீர் மரணம்
 
 

2017ம் ஆண்டு தமிழில் முதன் முதலாக பிக்பாஸ் நிகழ்ச்சி அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றவர் ஆரவ். பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா இவரை காதலித்து தோல்வி அடைந்தது தனிக்கதை.  ஓவியாவாலேயே ஆரவும் பிரபலமானார். 

சரண் இயக்கத்தில் மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ் திரைப்படத்திலும் நடித்தார். அதன்பின் ராஜ பீமா என்கிற திரைப்படத்திலும் நடித்தார். இப்படம் இன்னும் வெளியாகவில்லை. இதையடுத்து தனது வாழ்வின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்த ஆரவ் கெளதம் மேனன் இயக்கத்தில் உருவான ஜோஷ்வா படத்தில் நடித்து வரும்  ராஹி என்பவரை காதலித்து பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துக்கொண்டார். 

இப்படி தொடர்ந்து ஆராவின் வாழ்க்கையில் நிறைய நல்ல விஷயங்களை கொடுத்த கடவுள் தற்ப்போது அவரது குடும்பத்தையே சோகத்தில் மூழடித்துள்ளார். ஆம், ஆரவ்வின் தந்தை உடல்நலக்குறைபாடு காரணமாக  இன்று அதிகாலை 1.30 மணிக்கு காலமானார். அவரது இறுதி சடங்குகள் இன்று மாலை சொந்த ஊரான நாகர்கோவில் நடைபெறுகிறது. அவருக்கு திரைப்பிரபலங்கள், நண்பர்கள் என அனைவரும் இரங்கல் தெரிவித்து ஆரவ்விற்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.  

From around the web

Trending Videos

Tamilnadu News