×

பிக்பாஸ் புத்தக அறிமுகம்… இந்த வாரம் கமல் அறிமுகப்படுத்திய புத்தகம் இதுதான்!

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 ல் வாரம்தோறும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் என ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்து வருகிறார்.

 

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 4 ல் வாரம்தோறும் படிக்க வேண்டிய ஒரு புத்தகம் என ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்து வருகிறார்.

பிக்பாஸ் சீசன் 4 இந்த ஆண்டு கொரோனா காரணமாக மிகவும் தாமதமாக தொடங்கியது. வழக்கத்தை விட இந்த ஆண்டு பெரிய சுவாரஸ்யமாக நிகழ்ச்சி நடக்கவில்லை என சொல்லப்படுகிறது. ஆனால் கமல் மட்டும் வழக்கம் போல ஸ்கோர் செய்து சென்றுவிடுகிறார். தனது தனித்துவமான பேச்சால் மட்டும் அல்லாமல் இந்த ஆண்டு அவர் செய்யும் ஒரு வித்தியாசமான முயற்சிக்காகவும் பாராட்டுகள் கிடைக்கின்றன. வார இறுதி நாட்களில் தோன்றும் கமல் ஒவ்வொரு எபிஸோடிலும் படிக்கவேண்டிய ஒரு புத்தகத்தை பரிந்துரை செய்யப்போவதாக கூறியிருந்தார்.

அந்த வகையில் கடந்த வாரங்களில் பிளேக், வென்முரசு, புயலிலே ஒரு தோனி ஆகிய புத்தகங்களை அவர் இதற்கு முன்னர் அறிமுகம் செய்தார். அதையடுத்து இந்த வாரம் எழுத்தாளர் தொ பரமசிவன் எழுதிய அழகர் கோயில் என்ற புத்தகத்தை அறிமுகப்படுத்தினார். மேலும் பேராசிரியர் பரமசிவன் அவர்களையும் வீடியோ மூலமாக பேசவைத்தார்.

From around the web

Trending Videos

Tamilnadu News