கடந்த 100 நாட்களாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கும் பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தவர் தான் டான்ஸ் மாஸ்டர் அமீர். இவர் அங்கு நடத்தப்பட்ட போட்டியில் வெற்றி பெற்று டிக்கெட் டூ பினாலேயை வென்றுள்ளார்.
எனவே இவர் நேரடியாக இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை பெற்றுள்ளார். ஆனால் அண்மையில் பணப்பெட்டி வைக்கப்பட்டபோது 11 லட்சம் ரூபாய் வந்ததும் அதை எடுத்துக்கொண்டு வெளியே செல்லப் போவதாக போட்டியாளர்களிடம் நக்கலாக கூறிக்கொண்டிருந்தார். ஆனால் அவ்வாறு எடுத்துக்கொண்ட அவர் வெளியே செல்லவில்லை.
அதற்கு பதிலாக 11 லட்சம் ரூபாய் பணத்துடன் சிபி வீட்டை விட்டு வெளியேறியேறினார். இந்நிலையில் இது குறித்து அமீர் வீட்டு உறவினர் ஷாஜி அவர்கள் பேசுகையில், அமீர் பணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்து விடுவார் என்று தான் நாங்கள் நினைத்தோம். ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அது எங்களுக்கு சற்று ஏமாற்றமாக தான் இருந்தது எனக் கூறியுள்ளார்.
TVK Vijay:…
TVK Stampede:…
Vijay TVK:…
Karur: தமிழக…
Tvk Stampede:…