Connect with us
mgr_main_cine

latest news

எம்.ஜி.ஆருக்கு கலங்கத்தை ஏற்படுத்திய சந்திரபாபு!.. ராமாபுரத்தில் நடந்த உச்சக்கட்ட மோதல்!..

தமிழ் சினிமாவில் நகைச்சுவை மன்னனாக வலம் வந்தவர் சந்திரபாபு. இவரின் அசாத்தியமான நடிப்பு, உடல்பாவனை போன்றவற்றால் மக்கள் மனதில் ஆழ்ந்த இடம் பிடித்தார். இன்றைய தலைமுறைகளில் சிலர் கூட அவரை நியாபகப்படுத்தும் விதமாக மிமிக்ரி பண்ணி கொண்டிருக்கிறார்கள்.

mgr1_cine

சிரிக்க வைக்கும் சந்திரபாபு வாழ்க்கையில் சில பிரச்சினைகளும் சூழ்ந்திருந்தன. மது, போதை , குடிப்பழக்கம் என அனைத்து பழக்கங்களுக்கும் ஆளானார் சந்திரபாபு. இந்த நிலையில் எம்.ஜி.ஆரை வைத்து ஒரு புதிய படத்தை இயக்க முடிவு செய்தார் சந்திரபாபு. எம்.ஜி.ஆர் என்றால் அவரை நம்பி பணம் கொடுக்க பைனான்சியர்கள் வருவார்கள் என்று எண்ணிய சந்திரபாபு அதே மாதிரி ஒரு பைனான்சியரை ஏற்பாடு செய்தார்.

mgr2_cine

எம்.ஜி.ஆரும் நடிக்க ஒப்புக்கொண்டார். இதை தன் வசமாக்கிய சந்திரபாபு பண விஷயமாக அந்த பைனான்சியர் வீட்டுக்கு அடிக்கடி செல்வதை வழக்கமாக கொண்டிருந்தாராம். போனவர் சும்மா இல்லாமல் அந்த பைனான்சியர் மனைவியுடன் நெருக்கமாக பழகுவதை வாடிக்கையாக கொண்டிருந்தாராம். இதை பார்த்துப் பொருத்துக்கொள்ளாத அந்த பைனான்சியர் எம்.ஜி.ஆரிடம் போய் ‘உங்களுக்காக தான் இந்த படத்திற்கு பணம் கொடுக்க சம்மதித்தேன், ஆனால் இதையே காரணமாக வைத்து சந்திரபாபு என் வீட்டுக்கு அடிக்கடி வந்து மனைவியுடன் நெருங்க முயற்சிக்கிறார் ’என்று சொன்னாராம்.

mgr3_cine

இதை கேட்ட எம்.ஜி.ஆர் சந்திரபாபுவை ராமாபுரம் தோட்டத்திற்கு வரவழைத்து இப்படி பண்ணுவது சரியல்ல, தப்பு என சொல்லியிருக்கிறார். ஆனால் சந்திரபாபு ‘இது என்னுடைய சொந்த விஷயம், நீங்கள் தலையிடாதீர்கள்’ என்று சொல்ல கோபத்தில் எம்.ஜி.ஆர் இந்த படத்தில் நடிக்க மாட்டேன் என்று விலகி விட்டாராம். இதனால் அதிர்ச்சியான சந்திரபாபு எம்.ஜி.ஆரின் அண்ணனிடம் முறையிட்டிருக்கிறார். இது அப்படியே வாக்குவாதமாக போக சந்திரபாபுவுக்கும் எம்.ஜி.ஆரின் அண்ணனுக்கும் அடிதடியில் போய் முடிந்திருக்கிறது.

mgr4_cine

இந்த விஷயத்தை அப்படியே ஆரப்போட்ட எம்.ஜி.ஆர் சந்திரபாபுவின் இந்த மோசமான பழக்கத்தால் பணத்தை இழந்து ஒன்னுமில்லாமல் இருந்திருக்கிறார். அதன் பிறகு, தான் நடித்த அடிமைப்பெண் படத்தில் சந்திரபாபுவிற்கு நடிக்க வாய்ப்பு கொடுத்து அவரது வாழ்க்கையில் வெளிச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறார். சந்திரபாபு எம்.ஜி.ஆரை வைத்து எடுக்க நினைத்த படம் மாடி வீட்டு ஏழை. இதே பெயரில் பின்னாளில் சிவாஜி நடிக்க ஒரு திரைப்படம் வெளியானது. இந்த சுவாரஸ்யமான தகவலை எம்.ஜி.ஆரை பற்றி ஆய்வு செய்து கொண்டிருக்கும் எழுத்தாளர், முனைவர் ராஜேஸ்வரி செல்லையா தெரிவித்திருந்தார்.

author avatar
Rohini Sub Editor
நான் ரோகிணி. இந்த இணையதளத்தில் கடந்த 4 ஆண்டுகளாக செய்தி பிரிவில் சப் எடிட்டராக பணியாற்றுகிறேன். சினிமா தொடர்பாக அனைத்து செய்திகள் குறிப்பாக விமர்சனம், பழைய சினிமா தகவல்களை தருவதில் அதிக விருப்பம் உடையவர்.
Continue Reading

More in latest news

To Top