×

“என் இனமடா நீ” - சுரேஷ்சை புகழ்ந்து தள்ளிய பிக்பாஸ்!

பிக்பாஸ் வீட்டைவிட்டு மொதல்ல இவரை வெளியே அனுப்புங்க என சொன்ன அதே ரசிகர்கள் தான் தற்போது இவர் இல்லன்னா ரொம்ப போரடிக்கும் போலயே என ஆதரவுக்கரம் நீட்ட ஆரம்பித்து இருக்கின்றனர். 
 

சரியாக ஒரே வாரத்தில் சக போட்டியாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவை தக்கவைத்த அந்த நபர் சுரேஷ் சக்கரவர்த்தி. இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் இவர்தான்.

இதை கேள்விப்பட்டதில் இருந்து ஹை! இந்த வாரம் பிக்பாஸ் வீட்ல நெறைய சண்ட  இருக்கும், என ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர். முதலில் சாதாரண போட்டியாளராக ரசிகர்களாக பார்க்கப்பட்ட சுரேஷ் தற்போது வலிமையான போட்டியாளராக உருவெடுத்து வருகிறார். கமலின் முன்னிலையிலேயே இவர்கள் யாரும் சண்டை போட, மாட்டேன் என்கிறார்கள் என்று புகார் சொல்கிறார் என்றால் பார்த்து கொள்ளுங்கள். இதைப்பார்த்து 'பிக்பாஸ் கூட என் இனமடா நீ' என உள்ளுக்குள் சந்தோஷப்பட்டு இருப்பார்.

இந்த வார கேப்டன் என்பதால் இவரை யாரும் நாமினேட் செய்ய முடியாது. இன்னும் ஒருசில வாரங்கள் தாக்குப்பிடித்தால் அனைவருக்கும் ஒரு கடுமையான போட்டியாளராக உருவெடுக்கலாம். உடல்நலம் சார்ந்த போட்டிகளில் எப்படி விளையாடுவார் எனபது தெரியவில்லை. ஒருவேளை அதிலும் தாக்குப்பிடித்தால் பிக்பாஸ் டைட்டிலை இவர் தட்டிச்செல்ல வாய்ப்புகள் அதிகம் இருக்கின்றன. தற்போது பெண் போட்டியாளர்களுக்கு போட்டியாக சுரேஷ்க்கு ரசிகர்கள் ஆர்மி ஆரம்பித்து இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது!

From around the web

Trending Videos

Tamilnadu News