Connect with us

Cinema News

விரைவில் OTTக்கு பெரிய ஆப்பு… இனி ஆறு மாசம் காத்திருக்க வேண்டியது தான்… தரமான சம்பவம் இதுதான்….

பொதுவாக ஒரு திரைப்படங்கள் திரையரங்குகளில் வெளியானால் 30 நாட்களுக்குப் பிறகு அந்த படம் அமேசான் பிரைம், நெட்ப்ளிக்ஸ் போன்ற OTT- தளங்களில் வெளியாகும். ஆனால் தற்பொழுது அதற்கு ஆப்பு வைக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.

அதாவது தெலுங்கு சினிமாவில் உள்ள சில தயாரிப்பாளர்கள் கூட்டமாக பேச்சு வார்த்தை ஒன்றை நடத்தி , ஒரு படம் வெளியானால் அந்த படம் 6 மதத்திற்கு பிறகு தான் ஓடிடி-யில் வெளியாக வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்துள்ளார்களாம்.

இதையும் படியுங்களேன் – நான் யார் வாய்ப்பையும் தட்டி பறிக்கல.! கொந்தளித்த ஷங்கர் மகள்.! நடந்த மொத்த விஷயமும் இதுதான்….

இப்போதிலிருந்தே இது அமலில் வந்துள்ளதாம்.  அந்த வகையில், சமீபத்தில் அமீர்கான் நடிப்பில் வெளியான “லால் சிங் தத்தா” படம் 6 மாதத்திற்கு பிறகு தான் ஓடிடியில்  வெளியாகும் என அமீர்கானே அறிவித்துள்ளார். இந்த நிலையில், தெலுங்கில் செய்த அதே பாணியை தான் தமிழ் தயாரிப்பாளர்களும் எடுக்க முடிவெடுத்து உள்ளார்களாம்.

அதன் தொடர்பான மீட்டிங்கும் விரைவில் நடைபெறவுள்ளதாம். எனவே தமிழ் சினிமாவிலும் அப்படி நடந்தால் கண்டிப்பாக பெரிய பெரிய ஓடிடி நிறுவனங்களுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்படும் என கூறப்படுகிறது. அப்படி நடந்தால் தமிழ் திரைப்படங்களும் 6,7 வாரம் கழித்து தான் ஓடிடியில் வெளியாகும் என கூறப்படுகிறது.

author avatar
Manikandan
Continue Reading

More in Cinema News

To Top