பிக் பாஸ் சீசன் 10 ப்ரோமோ வெளியானது... பாட்டாவே பாடிட்டாரே விஜய் சேதுபதி!

 
bb

விஜய் டிவியின் பிரபல ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழ் சீசன் 10-ன் ப்ரோமோ பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இந்த சீசனில் போட்டியாளர்களை தேர்தேடுப்பதற்காக பிக்பாஸ் காமன் மேன் என்ற மற்றோரு புதிதான நிகழ்ச்சியை விஜய் டிவி அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிகழ்ச்சியில் வெற்றிபெருபவர்களுக்கு பிக் பாஸ் சீசன் 10ல் பங்கேற்கும் வாய்ப்பு அளிக்கப்படவுள்ளது.

2017-ஆம் ஆண்டு தமிழில் தொடங்கிய பிக்பாஸ், இதுவரை 9 வெற்றிகரமான சீசன்களை நிறைவு செய்துள்ளது. முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த இரண்டு சீசன்களாக விஜய் சேதுபதி தொகுப்பாளராக இருந்து வருகிறார். தற்போது 10-வது சீசனையும் அவரே தொகுத்து வழங்கவுள்ளார்.


ஒவ்வொரு சீசனிலும் புதிய போட்டியாளர்கள், பரபரப்பான டாஸ்க்கள் மற்றும் எதிர்பாராத திருப்பங்களால் ரசிகர்களை கவர்ந்த பிக்பாஸ், இந்த முறையும் என்னென்ன புதுமைகளை கொண்டு வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. போட்டியாளர்கள் பட்டியல் மற்றும் நிகழ்ச்சி தொடக்க தேதி குறித்த அறிவிப்புக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

Tags

From Around the web