×

ரகாடா நடந்துகொள்ளும் சனம் ஷெட்டி - முதல் நாளே கலங்கி அழுத ஷிவானி

இன்றைய நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வீடியோ

 

பிக்பாஸ் 4 சீசன் நேற்று முதல் ஒளிபரப்பாகியது. இந்நிகழ்ச்சியில் ரியோராஜ், சனம்ஷெட்டி, ரேகா, பாலாஜி முருகதாஸ், அனிதா சம்பத், ஷிவானி நாராயணன் ஜித்தன் ரமேஷ், வேல்முருகன், ஆரி, சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்கரவர்த்தி , ஆஜித் உள்ளிட்டர் பங்கேற்றுள்ளனர்.

முதன் நாள் போட்டியாளர்கள் அறிமுக நிகழ்ச்சி என்பதால் ரசிகர்ளும் மிகுந்த எதிர்பார்ப்பில் டிவி முன்பு அமர்ந்து சேனலை ஸ்கிப் பண்ணாமல் பார்த்தனர். இதில் பெரும்பாலும் விஜய் டிவியை சேர்ந்த பிரபலங்களே உள்ளதாக ஒரு பேச்சு போய்க்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் இன்று காலை வெளியான ப்ரோமோ வீடியோவில் எல்லோரும் தூங்கி எழுந்து நல்லா ஆட்டம் போட்டு நாளை துவங்கினர். ஆனால், அதற்குள் இரண்டாவது ப்ரோமோவில் போட்டியாளர்கள் அனைவரும் ஷிவானியை ரவுண்டு கட்டி கலங்க வைத்துவிட்டனர். ஹார்ட் பிரேக் என்ற முத்திரை ஷிவானிக்கு குத்திய சனம்,  யாரிடமும் பேசாமல் உம்முனு இருப்பதாக கூறி களங்கப்படுத்திவிட்டனர்.

From around the web

Trending Videos

Tamilnadu News