×

 இப்படியே போச்சுன்னா நெஜமாவே அட்ரெஸ் இல்லாம போயிடுவ அனிதா - பிக்பாஸ் ப்ரோமோ!

நாளுக்கு நாள் அனிதாவின் நடவடிக்கையை வெறுக்கும் மக்கள்

 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் போட்டியாளர்கள் பெரும்பாலானோர் வெளியில் இருப்பது போல் உள்ளே இருப்பதில்லை. அவர்களது சுரூபம் உள்ளே சென்ற பிறகு தான் அவரவர் கேரக்டர் வெளியில் வருகிறது. அந்தவகையில் அனிதாவிற்கு முதல் நாளே நிறைய ரசிகர்கள் கூடினர்.

ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவரது நடவடிக்கை மக்களுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. சுரேஷ் சக்கரவர்த்திக்கும் அவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் சண்டை என போய்க்கொண்டிருக்கிறது. அனிதா பெரியவர்களுக்கு மரியாதை கொடுப்பதில்லை. ஓவர் Attitude,  நக்கல், என திமிர் பிடித்த பெண் என பெயரெடுத்து வருகிறார்.

இதனால் பெருவாரியான மக்கள் கடந்த இரண்டு நாட்களாக அனிதாவை வெறுத்ததோடு தொடர்ந்து அவரது நடவடிக்கைகளை விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் தற்ப்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்,  " தான் மிகவும் கஷடப்பட்டு இந்த அளவிற்கு வளர்ச்சி அடைந்ததாகவும்.ஆனால், அந்த நல்ல பெயரை இங்கு கெடுத்துக்கொள்ள விரும்பவில்லை என்றும் கூறி அழுது வேஷம் போடுகிறார்.

உண்மையில் அனிதாவிற்கு தினம் தினம் ப்ரோமோவில் இடம் பெற வேண்டும்,நல்ல பெயர் எடுக்கவேண்டும் என்ற எண்ணம் அதிகம் உள்ளது. ஆனால் அவரது திமிரான நடவடிக்கை அத்தனையும் கெடுத்துவிடுகிறது. சொந்த வீடு கூட தனக்கு இல்ல இதனால் பல நேரங்களில் என்னுடைய அட்ரெஸ் கூட எனக்கு ஃபில் பண்ண தெரியாது என கூறி சிம்பதி கிரியேட் செய்துள்ளார். அனிதா.... நீ இப்படியே போனால் நெஜமாவே அட்ரெஸ் இல்லாம போயிடுவ.. ஒழுங்கா பார்த்து நடந்துக்க..


From around the web

Trending Videos

Tamilnadu News