×

எவிக்ஷன் பயத்தால் ரேகாவை வீண் சண்டை இழுக்கும் சனம் ஷெட்டி!

ரேகா - சனம் ஷெட்டிக்கு இடையே முட்டிய சண்டை

 

பிக்பாஸ் தமிழ் 4வது சீசன் தற்போது துவங்கியுள்ளது. இதில், ரியோ, சனம் ஷெட்டி, ரேகா, பாலா, அனிதா சம்பத், ஷிவானி, ஜித்தன் ரமேஷ், பாடகர் வேல் முருகன், ஆரி அர்ஜுனன், சாம், கேப்ரில்லா, அறந்தாங்கி நிஷா, ரம்யா பாண்டியன், சம்யுக்தா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாடகர் ஆஜித் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் எதாவது செய்து கன்டென்ட் கொடுக்கவேண்டும் என நினைத்து ஆளாளுக்கு தேவையே இல்லாத சண்டையை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பெரிதாக்கி வருகின்றனர்.  அந்தவகையில் ஷிவானி - சுரேஷ் சக்கரவர்த்தி, அனிதா - சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோரின் சண்டை நடந்து முடிந்தது.

தற்ப்போது ரேகா மற்றும் சனம் ஷெட்டிக்கு இடையே சண்டை வெடித்துள்ளது. காரணம் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் சனம் ஷெட்டி , ரேகா, கேப்ரில்லா, சம்யுக்தா உள்ளிட்ட 4 பேர் இருக்கின்றனர். இதில் யாரேனும் ஒருவர் வெளியேற்றப்படுவர். இதனால் சனம் சண்டை இழுத்து எவிக்ஷனில் இருந்து தப்பிக்க பிளான் போட்டு ரேகாவுடன் வீண் வம்பு இழுக்கிறார்.

From around the web

Trending Videos

Tamilnadu News