×

கோர்ட்டுக்கு போன பிக்பாஸ் வீடு - குற்றாவளி கூண்டில் ஏறிய பாலா சனம் ஷெட்டி!

சுவாரஸ்யத்தை தூண்டும் பிக்பாஸ் ப்ரோமோ

 
பிக்பாஸ் வீட்டில் இன்றைய நாளுக்கான முதல் ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ளது. இதில் பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் வீட்டில் இருக்கும் மற்றொரு போட்டியாளர் மீது உள்ள கருத்து வேறுபாடுகளை பதிவு செய்யவேண்டும்.

பின்னர் சம்மந்தப்பட்ட இருவரையும் கோர்ட்டில் அழைத்து சுதித்ரா நீதிபதியாக அவர்களது பிரச்சனைகளை  விவாதித்து தீர்வு கொடுக்கிறார். இதில் முதலாவதாக சனம் ஷெட்டி மற்றும் பாலாவுக்கு இடையில் நேற்று நடந்த சண்டை குறித்து விவாதிக்கப்படுகிறது. பின்னர் தீர்ப்பு பாலாவுக்கு சாதகமாக கொடுக்க ஆரி அதை எதிர்த்து வாக்குவாதம் செய்கிறார்.

சுசித்ரா கொஞ்சம் கொஞ்சமாக அர்ச்சனா இடத்தை காலி செய்து வருகிறார். வீட்டில் உள்ள முக்கியமான சில வேலைகளை சுசித்ரா எடுத்து செய்வதால் பலரது முகங்கள் இங்கு தெரியாமலே போகிறது. எனவே இந்த வாரம் முழுக்க அர்ச்சனா , சனம் ஷெட்டி , பாலா , சுசித்ரா உள்ளிட்ட சில பேர் கண்டெண்ட்டிற்காக எதையாவது செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News