×

யப்பா டேய்... பாலா போரிங் பெர்ஃபாமரா? ஜித்தன் பொம்மைக்கு பேட்டரி போட்ட கமல்!

பாலா மற்றும் ஜித்தன் ரமேஷுக்கு இடையில் இந்த வாரம் செம சம்பவம் இருக்கு

 

பிக்பாஸ் வீட்டில் இந்த வராம் முழுக்க பெரிதாக சொல்லிகொள்ளுபடி சுவாரஸ்யமாக ஒன்றுமில்லை. தீபாவளி டாஸ்க் கொஞ்சம் ஓரளவிற்கு ஓகேவாக இருந்தது. இன்னும் இந்த வாரம் எவிக்ஷன் எதுவும் இல்லாததால் வார இறுதி நாளும் சுவாரஸ்யமாக இல்லை.

இருந்தும் கமல் தீர்த்து வைக்கும் பஞ்சாயத்தை கேட்கவே ஊரே ஒன்று கூடி அமர்ந்திருக்கிறது. அந்தவகையில் சற்றுமுன் வெளியான இன்றைய நாளுக்கான முதலாவது ப்ரோமோவில். வீட்டின் போரிங் பெர்ஃபாமர் யார் என்பது குறித்து கமல் ஒர்ஸ்ட் போரிங் பெர்ஃபாமரான ஜித்தன் ரமேஷிடமே கேட்க உடனே செம ட்விஸ்ட் வைத்தார்.

அதாவது, வீட்டில் இருக்கும் போட்டியாளர்களில் பாலா தான் டாஸ்க் சரியாக செய்யவில்லை எனவே அவர் தான் போரிங் பெர்ஃபாமர் என கூறி சிரிப்பு வரும்படி அதிர்ச்சியளித்தார். அவர் சொல்வதை வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர் ஏற்றுக்கொள்கிறீர்களா என கமல் கேட்டாலும் அவர்கள் மட்டும் இல்ல வெளியில் உள்ள ஆடியன்ஸ் கூட யாரும் ஏத்துக்கமாட்டாங்க. என்ன தில் பார்த்தியா இந்த ரமேஷுக்கு...!!


From around the web

Trending Videos

Tamilnadu News