×

ஆண்டவருக்கு குசும்பு பார்த்தீங்களா...? ஷிவானிக்கு ஒரு குறும்படம் பார்சல்..!!

பிக்பாஸ் ப்ரோமோ வீடியோ

 
பிக்பாஸ் வீட்டில் வார இறுதி நாட்கள் என்றாலே ஷோ அனல் பறக்கும். கமல் காரசாரமாக பஞ்சாயத்து செய்து கண்டிப்பார். ஆனால், இன்று செம கூலாக வாங்க வேண்டியவர்களை உட்கார்ந்துக்கொண்டே கேள்வி கேட்டு வெளுத்து வாங்குகிறார்.

பாலா மற்றும் கேபிரில்லாவுக்கு இடையில் டாஸ்கின் போது நடத்த சண்டையில் மூக்கை நுழைத்த ஷிவானி பாலாவுக்கு சப்போர்ட்டாக கேபியிடம் சண்டையிட்டார். அது குறித்து இன்று கேட்ட கமல் ஷிவானிக்கு பயத்தை உண்டு பண்ணிட்டார்.

ஷிவானி அன்னைக்கு தான் பேபேன்னு எதோ பேச ஆரமிச்சாங்க... அதுக்குள்ள குறும்படத்த போட்டு குருமா வச்சிடுவாங்க போல. கமல் எனக்கு தெரியுமே என்று நக்கலாக கூறி செம ரியாக்ஷன் கொடுத்தது தான் இந்த ப்ரோமோவின் ஹைலைட். அப்போ பாலாஜி , ஷிவானி ஃபேஸ் ரிஆக்க்ஷன் பார்க்கணுமே மூஞ்சி ஈ ஆடல ரெண்டு பேருக்கும். ஐயோ வண்டி நம்ம  பக்கம் திரும்புதே என்று ஷிவானி விசனம் பிடிச்சுட்டாக...

From around the web

Trending Videos

Tamilnadu News