×

எங்கள் வீட்டில் எல்லா நாளும்... மகிழ்ச்சியில் மூழ்கிய பிக்பாஸ் குடும்பம்!

விஜயதசமி ஸ்பெஷல் ப்ரோமோ வீடியோ

 
நாடு முழுக்க இன்று விஜயதசமி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் தற்ப்போது பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களும் ஒன்று கூடி ஆயுத பூஜையை ஆட்டம், பாட்டத்துடன் கொண்டாடியுள்ளனர். சாமி , கொலு பொம்மை, சர்க்கரை பொங்கல் , ஸ்வீட் , புத்தாடை என பிக்பாஸ் வீடே கலைக்கட்டியுள்ளது.

அதில் நகர வாசிகள் , கிராம வாசிகள் என இரண்டு பிரிவினராக பிரிந்து இந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  பிக்பாஸ் சரித்திரத்தில் முதன்முறையாக பிக்பாஸ் சீசன் 4ல் நவராத்திரி கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

இது தொடர்ந்து 4 மணி நேரம் இடைவிடாத கொண்டாட்டமாக இருக்கிறது. அத்துடன் போட்டியாளர்களுக்கு  சிறப்பு விருந்து கொடுக்கப்படுகிறது. ஆக மொத்தம் இன்று பிக்பாஸ் வீடே வானத்தை போல விஜயகாந்த் படம் போன்று ஒரே குடும்ப கொண்டாட்டமாக இருக்கிறது.

From around the web

Trending Videos

Tamilnadu News