Categories: Bigg Boss latest news

இவங்க பிக்பாஸ் வீட்டில் தான் இருக்காங்க… ஆனா இல்லை…

பிக்பாஸ் தொடங்கி நாளையுடன் ஒரு வாரம் முடியப்போகும் நிலையில், சில போட்டியாளர்கள் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கின்றனர். இவங்க பிக்பாஸ் வீட்டில் தான் இருக்காங்களா என ரசிகர்கள் நினைக்கும் வகையில் படு சைலைண்டாக விளையாடுகின்றனர்.

விஜய் டிவியில் கடந்த 4 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி பொதுமக்களிடையே மிகவும் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை கோலாகலமாக பிக்பாஸ் சீசன் 5 போட்டி தொடங்கியது. இந்த முறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டதில் பெண் போட்டியாளர்களே அதிகம் காணப்படுகின்றன. மாடல்கள், நாடகக் கலைஞர்கள், நாட்டுப்புற பாடகி, யூடியூபர்கள், ஆங்கர், நடிகர், நடிகைகள் என பலதரப்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த வாரம் முழுவதும் ஒரு கதை சொல்லட்டுமா டாஸ்க் நடைபெற்று வருகிறது. இதில் சக போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் கடந்து வந்த பாதையை மற்ற போட்டியாளர்களிடம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், வருண், மதுமீதா, நதியா சாங் இந்த மூன்று போட்டியாளர்கள் வீட்டில் இருக்கிறார்களா என மற்ற போட்டியாளார்களேக்கே தெரியாத அளவிற்குப் படு சைலைண்டாக இருக்கின்றனர். அதிலும், வருண் நிகழ்ச்சியில் ஜூம் செய்து பார்த்தல் கூட கண்ணில் பட மாட்டார் போல அந்த அளவிற்கு விளையாடி வருகிறார்.

ஒரு வாரம் தான் ஆனாலும், அவ்வப்போது மற்ற போட்டியாளர்களுடன் பேசி கூட பார்த்ததில்லை. யூடியூபர் அபிஷேக் ராஜா போல இல்ல விட்டாலும் அபிநவ் போலக் கூட்டத்துடன் அமர்ந்து பேசி சிரித்தால் கூட அவரின் முகம் வெளியே தெரிய வரும். ஒரு வேலை தான் எதற்கு இங்கு வந்தோம் என்பதை மறந்து விட்டாரோ என்னவோ. மற்றவர்களின் குணங்களை ஆராய்வதற்காக இப்படி இருக்கிறா இல்லை இதுதான் அவரது தந்திரமா எனத் தெரியவில்லை. எனினும் ஒரு வாரம் தானே ஆகிறது பொறுத்திருந்து பார்க்கலாம்.

adminram
பி.எஸ்.ஸி. பட்டதாரியான இவர் 17 ஆண்டுகளாக ஊடகத்துறையில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, வணிகம் மற்றும்அரசியல் குறித்த செய்திகளை வழங்கி வந்தார். தற்போது கடந்த 10 ஆண்டுகளாக சினி ரிப்போர்டஸ் தளத்தில் செய்தி மர்றும் தொழில்நுட்பம் சார்ந்த பணிகளை கவனித்து வருகிறார்.
Published by
adminram