என்ன நல்லா ஏமாத்திட்டாங்க!.. சினிமாவை விட்டே விலகுறேன்!.. பிக் பாஸ் பிரபலம் எடுத்த திடீர் முடிவு!..

பிக் பாஸ் அல்டிமேட்டின் டைட்டில் வின்னர் பாலாஜி முருகதாஸ் தொடர்ந்து பல படங்களில் நடித்து வரும் நிலையில், திடீரென சினிமாவை விட்டே தான் விலகப் போவதாக அறிவித்துள்ளார். மாடலிங் துறையில் மாடலாக வலம் வந்தவர் பாலாஜி முருகதாஸ். பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார்.

யாஷிகா ஆனந்தின் முன்னாள் காதலர் என்றும் நண்பர் என்றும் கூறப்பட்ட பாலாஜி முருகதாஸ் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வரவே யாஷிகா ஆனந்த் தான் காரணம் என்கிற தகவல்களும் அப்போது கசிந்தன.பிக் பாஸ் வீட்டுக்குள் பாலாஜி முருகதாஸுக்கும் சனம் ஷெட்டிக்கும் அடிக்கடி சண்டை வெடித்தது. பிக் பாஸ் வீட்டுக்கு வெளியேவும் இருவர் மத்தியிலும் சண்டை வெடித்தன. ஜோ மைக்கேல் என்பவருக்கும் பாலாஜி முருகதாஸுக்கும் சோஷியல் மீடியாவில் கடும் வாக்குவாதங்கள் நடைபெற்றன.

கடந்த ஆண்டு ஹீரோவாக வா வரலாம் வா படத்தில் நடித்த பாலாஜி முருகதாஸுக்கு அந்த படம் ஓடவே இல்லாத நிலையில், அப்செட் ஆனார். ஆனால், அதன் பின்னர் அருண் விஜய்யுடன் இணைந்து ரெட்ட தல படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் அருண் விஜய்க்கு இணையான கதாபாத்திரத்தில் இவர் நடித்து வருகிறார்.இந்நிலையில், ஜேஎஸ்கே கார்ப்பரேஷன் எனும் நிறுவனம் தனக்கு சம்பளமே தராமல் படத்தில் நடிக்க வேலை வாங்கி வருகிறது என்றும் ஒரு ரூபாய் கூட இதுவரை சம்பளம் தராமல் ஏமாற்றி விட்டார் அந்த பட நிறுவனத்தின் தயாரிப்பாளர் என பாலாஜி முருகதாஸ் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை போட்டு இனிமேல் சினிமாவில் நடிக்கவே மாட்டேன். நான் இதை விட்டு விட்டு வேற வேலையை பார்க்கப் போகிறேன் என்றும் அந்த தயாரிப்பாளரையும் கெட்ட வார்த்தையால் திட்டி ட்வீட் போட்டுள்ளார்.

Related Articles

Next Story