Biggboss Tamil: வெளியேறிய ஆதிரை… பிக்பாஸ் கொடுத்த சூப்பர் விஷயம்.. இதான் நடக்க போகுதா?

 
Biggboss Tamil: வெளியேறிய ஆதிரை… பிக்பாஸ் கொடுத்த சூப்பர் விஷயம்.. இதான் நடக்க போகுதா?

Biggboss Tamil: பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சியில் நேற்று ஆதிரை அதிரடியாக வெளியேறி இருக்கும் நிலையில் திடீரென ஒரு விஷயம் நடக்க இருப்பதாக வைரலாகி வருகிறது. 

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 மூன்றாவது வாரத்தில் முடித்துவிட்டு நான்காவது வாரத்தில் சென்று கொண்டிருக்கிறது. இதற்கு முன் நடந்த இரண்டு எலிமினேஷன்களும் ரசிகர்கள் எதிர்பார்த்த ஒன்றுதான். பெரிய அளவில் விளையாடாத பிரவீன் காந்தி மற்றும் திருநங்கை அப்சரா வெளியேறினர்.

ஆனால் இந்த முறை நடந்த வெளியேற்றம் சிலருக்கு சரியாக இருந்தாலும் பலருக்கு இது அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆதிரை முதல் வார நாமினேஷனில் இருந்து ரசிகர்களிடம் தனக்கான இடத்தை தக்கவைத்துக் கொண்டிருந்தார். ஒவ்வொரு முறை அவர் பேசும் விஷயங்கள் ரசிகர்கள் மனதை பிரதிபலிப்பாகவே இருக்கும்.

கண்டிப்பாக ஆதிரை பைனல் மேடையில் ஏறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் போட்டியாளர் எஃப்ஜேவும் நடந்து கொண்டது. பலருக்கும் வெறுப்பை தந்தது. இரண்டு வாரத்தில் காதல் கன்டென்ட் கொடுப்பது ரசிகர்களிடம் ரசிக்கும்படியாக அமையவில்லை.

அதிலும் கடந்த வாரம் முழுவதும் ஆதிரையை எப் ஜே தவிர்த்து வந்தார். ஆனால் தொடர்ந்து அவரிடம் ஆதிரை பேசிக்கொண்டிருந்தது. அவர் மீது சலிப்பை ஏற்படுத்தி எலிமினேஷன் வரை கொண்டு சென்று இருக்கிறது. இதன் காரணமாக முதல் முறை வெளியேறிய போட்டியாளர் மற்ற போட்டியாளர்கள் குறித்து அவர்களுக்கு முகத்திற்கு நேராக கருத்துக்களை முன் வைக்க அனுமதி கொடுக்கப்பட்டது. 

அதுமட்டுமல்லாமல், மேடையில் பேசிய ஆதிரை நான் வீட்டிற்குள் இருக்க தகுதி உடையவள். ஆனால் தகுதியே இல்லாமல் இன்னும் பலர் உள்ளே இருக்கின்றனர். இந்த நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களுக்கு சரியான புரிதல் இல்லை என சொல்லி அதிர்ச்சி கொடுத்தார்.

விளையாட்டில் அதிக ஆர்வம் காட்டி வந்த ஆதிரை வெளியேறி இருப்பதால் வைல்ட் கார்ட் எண்ட்ரியுடன் அவர் மீண்டும் 8 வாரங்களுக்கு பிறகு அவர் உள்ளே வர வாய்ப்பு இருப்பதாக கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. ஆனால் ஆதிரை அதற்கு ஒப்புக்கொள்வார் என்பது கேள்விக்குறியாகவே இருக்கிறது. 


Tags

From Around the web