×

பிக்பாஸ் புகழ் சினேகனுக்கு விரைவில் கெட்டிமேளம் டும் டும் டும்!...

தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் வகையில் நிறைய ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன்.

 
snehan181120_1

தமிழ் சினிமாவில் மக்கள் கொண்டாடும் வகையில் நிறைய ஹிட் பாடல்களை எழுதியவர் சினேகன்.

ஹிட் பாடல்கள் அதிகம் கொடுத்து சாதனை செய்த இவர் விஜய் தொலைக்காட்சியில் ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் 1 சீசனில் கலந்துகொண்டார்.

அதில் கட்டிப்பிடி வைத்தியம் செய்த சினேகன் பெரிய அளவில் மக்களிடம் ரீச் ஆனார். அதன்பின் அவர் நிறைய படங்களுக்கு பாடல்கள் எழுதுவார் என்று பார்த்தால் கமல்ஹாசன் தொடங்கிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் பணிபுரிய ஆரம்பித்தார்.

கடந்த தேர்தலில் ஒரு இடத்தில் போட்டியிட்ட சினேகன் தோல்வியை சந்தித்தார். 

தற்போது சினேகனை பற்றி என்ன தகவல் என்றால் அவருக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. தான் காதலித்த பெண்ணையே திருமணம் செய்ய காத்திருக்கிறார் சினேகன்.

எனினும் கமல்ஹாசன் கொடுக்கும் தேதிக்காக சினிகேன் காத்திருக்கிறார். அவரது தலைமையில் திருமணம் நடைபெற வேண்டும் என ஆசைப்படுகிறார் என்கிற தகவல்கள் வெளியாகியுள்ளன.

From around the web

Trending Videos

Tamilnadu News