Connect with us

Bigg Boss

கையில கத்தி!.. மனசுல கெட்ட புத்தி.. நிக்சனுக்கு ரெட் கார்டு கொடுங்க கமல்.. கொதிக்கும் ரசிகர்கள்!..

ஏற்கனவே நிக்சன் சொருகிடுவேன் என அர்ச்சனாவை பார்த்து பேசிய நிலையில், கையில் கத்தி வைத்துக் கொண்டு பூர்ணிமாவுடன் பேசிய காட்சிகளை வெளியிட்டு ரசிகர்கள் நிக்சன் நிஜமாவே ரொம்ப டேஞ்சரான ஆளாத்தான் தெரிகிறார் என்றும் அவரால் அர்ச்சனாவின் உயிருக்கு பாதிப்பு ஏற்படக்கூடும் அவருக்கு உடனடியாக ரெட் கார்டு கொடுத்து வெளியே துரத்தி அடிங்க என கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பிக் பாஸ் சீசன் 7 இதுவரை இல்லாத அளவுக்கு பல சர்ச்சைகளுடன் ஓடிக் கொண்டிருக்கிறது. பிக் பாஸ் ஒரு மோசமான விளையாட்டு என்றும் நல்லவேளை என் பொண்ணு சீக்கிரம் வெளியே வந்துட்டா, அந்த நிகழ்ச்சியையே தடை பண்ணுங்க என வனிதா விஜயகுமார் இன்று ட்வீட் போட்டிருந்தார்.

இதையும் படிங்க: கேஜிஎஃப் 3 இது கன்பார்ம்.. ஆனா இது சந்தேகம் தான்.. பிரபல இயக்குனர் ப்ரசாந்த் நீல் சொன்ன ஸ்வீட் நியூஸ்..!

மேலும், நிக்சன் அர்ச்சனாவை பார்த்து நாய் என்றும் சேரி என்றும் சொருகிடுவேன் என சொன்னதற்கு சனம் ஷெட்டி, ஸ்ரீபிரியா உள்ளிடோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், சொருட்கிடுவேன் என சொன்ன நிக்சன் கிச்சனில் இருந்து கத்தியை எடுத்துக் கொண்டு மிரட்டல் தொனியில் பேசுவதை பார்த்த பிக் பாஸ் ரசிகர்கள் ஏதாவது எக்குத்தப்பா நடக்குறதுக்கு முன்னாடி நிக்சனுக்கு பிரதீப் ஆண்டனிக்கு கொடுத்தது போல ரெட் கார்டை கொடுத்து கமல் வெளியே அனுப்ப வேண்டும் என்றும் நிக்சனை காப்பாற்ற இந்த வாரம் எலிமினேஷன் இல்லை என சொல்லி அவருக்கு சப்போர்ட் செய்யக் கூடாது என்றும் கூறி வருகின்றனர்.

முன்னதாக மாயா எவிக்ட் ஆக வேண்டிய நேரத்திலும் இதே போலத்தான் எவிக்‌ஷன் இல்லாமல் போனது இப்போ நிக்சனுக்கும் அதே மாதிரி விஜய் டிவி செய்கிறது என குற்றச்சாட்டுக்களையும் அடுக்கி வருகின்றனர்.

இதையும் படிங்க: எம்ஜிஆரை கிண்டலடித்த சந்திரபாபு.. அந்த ஆணவத்துக்கு புரட்சி தலைவர் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?…

 

 

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top