×

யாரும் இல்லைனு அழுகாத செல்லம்... நாங்க இருக்கோம் உனக்கு.. குவியும் ரசிகர்கள்!

பிக்பாஸின் முதல் நாளில் சக போட்டியாளர்கள் ஹார்ட் புரோக் சிம்பலை அளித்தபோது கூட கலங்காத ஷிவானி நேற்று சக போட்டியாளர்களின் துயரங்களை கேட்டு கண்கலங்கி விட்டார். 
 

அவரின் அழுகையை பார்த்த ரசிகர்கள் அய்யோ எங்க தலைவி இவ்ளோ சாப்ட் கேரக்டரா இருக்காங்க, என தங்களது பங்குக்கு சில்லறையை சிதறவிட்டு வருகின்றனர்.

இதற்கிடையில் அவருக்கு ஆரி மற்றும் பாலா இருவரும் ஆறுதல் கூறி போட்டியில் கவனம் செலுத்தும்படி கேட்டு கொண்டனர். இரவில் வாக்கிங் சென்ற பாலா பேச்சுத்துணைக்கு ஷிவானியை அழைத்தார். இருவரும் பேசியபடி நடந்து சென்றபோது கடந்த வருடமே தன்னை பிக்பாஸ் போட்டிக்கு அழைத்ததாகவும் அப்போது போதுமான மெச்சூரிட்டி இல்லாததால் வீட்டில் தன்னை விடவில்லை என்றும் ஷிவானி தெரிவித்தார்.

மேலும் தனக்கு 3 பிரெண்ட்ஸ் மட்டுமே இருப்பதாகவும் அவர்களும் ஸ்கூல் பிரண்ட்ஸ் தான் என்றும் ஷிவானி தன்னைப்பற்றி கூறினார். இதைக்கேட்ட பாலா ஏன் 3 பிரண்ட்ஸ் மட்டும்? என கேட்க, பதிலுக்கு ஷிவானி எனக்கு அவங்க கூடத்தான் கம்பர்ட்டபிளா இருக்கும் என்றார். இதைப்பார்த்த ரசிகர்கள் இவர் யாரிடமும் நெருங்கி உடனே பழகிவிட மாட்டார் போல அதனால் என அவருக்கு சப்போர்ட் செய்து வருகின்றனர்.


 

From around the web

Trending Videos

Tamilnadu News