Connect with us

Bigg Boss

இந்த அளவுக்கு ஒரு மொக்கை பிக் பாஸ் ஷோவை பார்த்ததே இல்லை!.. கமல்ஹாசன் சரியான பிளேடு போட்டுட்டாரு!..

பிக் பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி வார நாட்களில் தீயாக இருந்த நிலையில் கமல் வரும் வார இறுதி நாட்கள் நிகழ்ச்சி பட்டையை கிளப்பும் என்றும் கல்வி குறித்த தெளிவான விளக்கத்தை கமல் கொடுப்பார் என்று பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

மேலும், கூல் சுரேஷ் – மாயா பிரச்சனை, விஜய் வர்மா – பிரதீப் ஆண்டனி பிரச்சனையை பேசுவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஜோவிகா – விசித்ரா பிரச்சனையை லைட்டாக எடுத்துக் கொண்டு, பவா செல்லதுரைக்கு முட்டுக் கொடுக்க நினைத்து அவர் ஒரு கதை சொன்னாரு பாருங்க.. இதுக்கு அதுவே தேவைலாம் என ரசிகர்கள் முதல் பிக் பாஸ் போட்டியாளர்கள் வரை காண்டாகி விட்டனர்.

இதையும் படிங்க: ஜெயிலர் வசூலை முந்த பிரஷர் கொடுத்த லியோ தயாரிப்பாளர்!.. ஒரே வார்த்தையில் வாயை மூட வைத்த லோகேஷ் கனகராஜ்!..

பிரபல முற்போக்கு எழுத்தாளரான பவா செல்லதுரை கதை சொல்லியாக எழுத்தாளர்கள் மத்தியிலும் வாசகர்கள் மத்தியிலும் பிரபலமானவர். வடசென்னை, ஜெய்பீம் உள்ளிட்ட பல படங்களிலும் நடித்துள்ளார்.

ஆனால், பிக் பாஸ் வீட்டுக்கு வந்து 60 ஆண்டுகளாக சேர்த்து வைத்த நல்ல பெயரை ஒரே வாரத்தில் இப்படி கெடுத்து விட்டாரே என்றும் பவாவின் ஒரிஜினல் முகத்தை காட்டியதற்கு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும் என சில எழுத்தாளர்களும் இதுதான் சாக்கு என போட்டு பொளந்து எடுத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: ஜோவிகா படிப்பை விட்டதற்கு காரணமே அவங்க அம்மா வனிதா தானா?.. பகீர் கிளப்பிய பள்ளி ஆசிரியை!..

இதுவரை இல்லாத அளவுக்கு இந்த சீசனை ரம்பம் போட்டு கமல்ஹாசன் கதை சொல்லி கழுத்தை அறுத்துவிட்டார் என பிக் பாஸ் நிகழ்ச்சியை கழுவி ஊற்றி வருகின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியை பல கோடி பேர் பார்த்து வரும் நிலையில், சில லட்சம் படிக்கும் மாணவர்களாவது நிகழ்ச்சியை பார்ப்பார்கள், வெறுமனே ஏஜ் கேப் என சொல்லி படிப்பின் அவசியத்தை மழுங்கடித்து விட்டது போலத்தான் தெரிகிறது என்றும் விளாசி வருகின்றனர்.

author avatar
Saranya M
Continue Reading

More in Bigg Boss

To Top