என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு காட்டுவாசி வேடமிட்டு ஜூலி வெளியிட்ட வீடியோ!
பிக்பாஸ் ஜூலியின் என்ஜாய் எஞ்சாமி வெர்ஷன்!
Wed, 31 Mar 2021

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் உலகத்தமிழ் மக்களை கவர்ந்தவர் ஜூலி. சிங்கப்பெண், வீரத்தமிழச்சி என தமிழ் மக்களால் பாராட்டப்பட்டு பிரபலமான ஜூலிக்கு பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது.
அதில் தான் அவரது உண்மையான குணம் என்னவென்று தெரிய வந்தது. பொய் , புறம்பேசுதல் உள்ளிட்ட காரணங்களால் மக்களால் வெறுக்கப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
அதையடுத்து சமூகத்தில் நடக்கும் அவலங்களை குறித்து அவ்வப்போது கருத்து தெரிவிப்பார். இடை இடையே யாரும் யோசித்துக்கூட பார்க்காத வகையில் ரிஸ்க்கான போட்டோ ஷூட் நடத்துவார்.
அந்தவகையில் சில நாட்களுக்கு முன்னர் காட்டுவாசி போன்று கெட்டப் போட்டு போட்டோ ஷூட் நடத்தினார். அந்த புகைப்படத்தை என்ஜாய் எஞ்சாமி பாடலுக்கு டப்ஸ்மாஷ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளார். இதோ அந்த வீடியோ...
#Julie pic.twitter.com/O6iBuYgY7M
— chettyrajubhai (@chettyrajubhai) March 30, 2021