மாப்பிள்ளை அவர்தான் போட்டு இருக்க சட்ட மட்டும் என்னது!.. விஜய்யை விடாத பிக் பாஸ் ஜூலி!..
தீய சக்தியுடன் தூய சக்தி கூட்டணி வைத்து விட்டது என்றும் விஜய் முதலமைச்சர் ஆனதே திமுக போட்ட பிச்சை தான் புலம்பிக் கொண்டிருந்த பிக் பாஸ் ஜூலி தற்போது புதிய ஐட்டத்துடன் வந்து விஜய் ரசிகர்களிடமும் தவெகவினரிடமும் தர்ம அடி வாங்கிக் கொண்டிருக்கிறார்.
பெரம்பூரில் விஜய்யை தோற்கடிக்க பிரச்சாரம் செய்வேன் என கிளம்பிய ஜூலி, கடைசியில் கொளத்தூரில் ஸ்டாலின் தோற்க காரணம் ஆகிவிட்டார் என தவெகவினர் கலாய்த்துத் தள்ளினர்.
இந்நிலையில், “மாப்பிள்ளை அவர்தான் போட்டு இருக்க சட்டம் மட்டும் என்னது” என மு.க. ஸ்டாலின் போட்டோவை போட்டு மீண்டும் விஜய்யை சீண்டியுள்ளார்.
மு.க. ஸ்டாலின் இப்போ எம்.எல்.ஏ கூட இல்லை என்றும் கூட்டணி கட்சிகளும் காலியாகி விட்டன. இப்படியே பேசிக் கொண்டு இரு அடுத்த தேர்தலில் திமுக காணாமல் போய்விடும் என தவெகவினர் ஜூலியை பங்கம் செய்து வருகின்றனர்.
விஜய்க்கு ஆதரவு தருவதை விட திமுகவுக்கு வேறு வழியில்லை என்றும் மீண்டும் தேர்தலை சந்திக்க திராணி இல்லை என்றும் அதிகம் செலவு செய்தால் கூட இன்னமும் இடங்கள் பறிபோகும் நிலை உள்ளதால் தான் ஸ்டாலின் தனது கூட்டணி கட்சியினரை தவெக பக்கம் போக சொல்லியுள்ளார் என்கின்றனர். விஜய் முதலமைச்சர் ஆன பின்னர், பிக் பாஸ் ஜூலி அப்படியே பல்டி அடித்து பேசுவார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.
