×

செக்கெட் சர்ட்... ஐடி கார்டு... ஹெட் செட் - மாஸ்டர் லுக்கில் கலக்கும் கவின்!
 

மாஸ்டர் விஜய் லுக்கில் வைரலாகும் பிக்பாஸ் புகழ் கவின்....!
 
 

சரவணன் மீனாட்சி தொடரில் வேட்டையன் கதாபாத்திரத்தின் மூலம் வெளிவுலகுக்கு அறிமுகமானவர் கவின். இவரது இந்த கதாபாத்திரம் பெண்களுக்கு மிகவும் பிடித்ததாக வடிவமைக்கப்பட்டிருந்தது. வேலை வெட்டி இல்லாத சண்டியராக கெத்தாக இருக்கும் ஒருவனாக அதில் நடித்திருப்பார் கவின்.

இதன் மூலம் அவருக்கு பிக்பாஸில் நுழைய வாய்ப்பு கிடைத்தது. அந்நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் அபிராமி, சாக்ஷி பின்னர் லாஸ்லியா என இளம் பெங்களுடன் கடலை போட்டே படுபேமஸ் ஆகினார். இதையடுத்து கவின் ஆர்மி உருவாகி இன்னும் அவரது புகழை ஓங்கி ஒலித்தனர்.

இந்நிலையில் அண்மையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கவின் மாஸ்டர் விஜய் கெட்டப்பில் செக்கெட் சர்ட்... ஐடி கார்டு... ஹெட் செட் என முழுக்க முழுக்க தளபதி தளபதி தோற்றத்தில் சென்றுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வெளியாகி சூப்பர் வைராகி வருகிறது. அண்ணே... கூலிங் கிளாஸ் மட்டும் மிஸ்ஸிங்'னே... ஆனால், இது கவின் ரசிகர்கள் எடிட் செய்த புகைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது.


 

From around the web

Trending Videos

Tamilnadu News